புதுச்சேரி: "ஓட்டுக்கு ரூ.2,500; தொகுதிக்கு ரூ.5 கோடி..." - ரங்கசாமி மீது காங்கி...
பிக் பாஸுக்குப் பிறகு அன்ஷிதாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை அன்ஷிதாவுக்கு மற்றொரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கு முன்பு விஜய் தொலைக்காட்சியின் செல்லம்மா தொடரில் நடித்திருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் பெற்றிருந்தார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முடித்த உடனேயே மற்றொரு பெரிய வாய்ப்பு அன்ஷிதாவுக்கு கிடைத்துள்ளது.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் (ஜன. 19) நிறைவு பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அக்டோபர் 6 முதல் நடைபெற்றுவந்த இந்த நிகழ்ச்சி, 100 நாள்களைக் கடந்து 106 நாள்களுக்கு ஒளிபரப்பானது.
மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் பிக் பாஸ் சீசன் 8 வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார். அவருக்கு அடுத்தபடியாக நடிகை செளந்தர்யா தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்களில் ஒருவராகப் பங்கேற்ற அன்ஷிதா, 84வது நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு சினிமா அல்லது சின்ன திரையில் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை போட்டியாளர்களிடயே இருந்தது. இந்த நம்பிக்கைக்கு ஏற்ப அன்ஷிதாவுக்கு பிக் பாஸ் முடித்த உடனேயே மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாகத் தொடங்கவுள்ள நடன நிகழ்ச்சியில் அன்ஷிதா போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளார்.
இதற்கான முன்னோட்ட விடியோவும் வெளியாகியுள்ளது. நடன நிகழ்ச்சிக்காக அன்ஷிதா கடுமையாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
தனது துறையில் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் முயற்சியாக தற்போது நடன நிகழ்ச்சியிலும் அன்ஷிதா பங்கேற்றுள்ளதால் ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | 45 வயதில் கடும் போட்டி! தீபக் மனைவியை பாராட்டிய முத்துக்குமரன்!