செய்திகள் :

Ranji Trophy : களமிறங்கும் ரோஹித், கோலி; களைகட்டும் ரஞ்சிக் கோப்பைப் போட்டிகள் - முழு விவரம்

post image
நடப்பு ரஞ்சிக் கோப்பைத் தொடரின் ஆறாவது சுற்றுப் போட்டிகள் நாளை முதல் தொடங்கவிருக்கிறது.

ரோஹித் சர்மா, ஜடேஜா,ஜெய்ஸ்வால், கில் என இந்திய அணியின் ஸ்டார்கள் ரஞ்சியில் களமிறங்க இருப்பதால், இந்தப் போட்டிகளின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது. உள்ளூரில் நியூசிலாந்துக்கு எதிரான ஒயிட் வாஷ், பார்டர் கவாஸ்கர் டிராபி தோல்வி இவற்றுக்கெல்லாம் பிறகு பிசிசிஐ இந்திய அணியின் வீரர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிட்டது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர், அணியின் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோருடன் தீவிரமாக கலந்து பேசிய பிறகு வீரர்களுக்கான 10 புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ விதித்ததாக தகவல்கள் வெளியானது.

பிசிசிஐ

அதன்படி வீரர்களின் குடும்பத்தினர் அவர்களுடன் பயணிப்பதற்கெல்லாம் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மிக முக்கியமாக இந்திய அணிக்கு ஆடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் ஆடுவதையும் உறுதி செய்ய வேண்டும். காயம் எதுவுமின்றி நலமாக இருக்கும்பட்சத்தில் தவிர்க்காமல் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

அதன்படிதான் இப்போது ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சூப்பர் ஸ்டார் வீரர்களே ரஞ்சிப் போட்டியில் களமிறங்க ஆயத்தமாகி வருகின்றனர். இருவருமே கடைசியாக 10-12 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ரஞ்சிப் போட்டியில் ஆடியிருக்கின்றனர். இந்திய அணியில் அவர்களுக்கான இடம் உறுதியான பிறகு உள்ளுர் போட்டிகளில் ஆடுவதை முழுமையாக தவிர்த்து வந்தனர்.

ரஞ்சிக் கோப்பை

ஆனால், இப்போது அவர்களின் பார்ம் கடுமையாக அடி வாங்கியிருக்கிறது. கடந்த ஆண்டில் இருவருமே டெஸ்ட் போட்டிகளில் பெரிதாக சாதிக்கவில்லை. சொற்ப ரன்களையே அடித்திருந்தனர். பார்டர் கவாஸ்கர் தொடரிலும் தங்களின் விக்கெட்டை இலகுவாக தாரை வார்த்துவிட்டு சென்றனர். பிசிசிஐ கட்டாயப்படுத்தாவிட்டாலும் அவர்களே முன்வந்து உள்ளூர் போட்டிகளில் ஆடினால்தான் மீண்டும் பார்முக்கு வர முடியும் என்ற நிலையிலேயே இருந்தனர்.

ரோஹித் சர்மா கடந்த சில நாட்களாகவே மும்பை அணியுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஜம்மு - காஷ்மீருக்கு எதிராக நாளை தொடங்கவிருக்கும் போட்டியிலும் அவர் களமிறங்கவிருக்கிறார். ஜெய்ஸ்வாலும் நாளையப் போட்டியில் மும்பைக்காக ஆடுகிறார். ரஹானே வழக்கம்போல மும்பை அணியின் கேப்டனாக செயல்படுவார்.

ரோஹித், கோலி

பஞ்சாப் அணிக்காக கில்லும் சௌராஷ்ட்ரா அணிக்காக ஜடேஜாவும் களமிறங்குகின்றனர். சௌராஷ்ட்ராவுக்கு எதிராக டெல்லி நாளை மோதுகிறது. ஆனால், கோலி நாளையப் போட்டியில் டெல்லி அணிக்காக ஆடவில்லை. 30 ஆம் தேதி தொடங்கும் போட்டியில் இரயில்வேஸூக்கு எதிராக கோலி களமிறங்கவிருக்கிறார். கழுத்து வலி காரணமாக நாளைய போட்டியில் பங்கேற்கவில்லை என கோலி கூறியிருக்கிறார்.

இந்திய அணியின் முக்கிய ஸ்டார்கள் நாளை ரஞ்சி போட்டியில் களமிறங்குவதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டிகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.!

Yuzvendra Chahal: சஹால் கரியர், முடித்துவிட்ட BCCI? - அர்ஷ்தீப் வசம் செல்லும் அரிய சாதனை!

இந்திய கிரிக்கெட்டில் 2015 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர், ஒயிட் பால் ஃபார்மட்டில் அஷ்வின் - ஜடேஜா கூட்டணிக்கு மாறாக குல்தீப் - சஹால் உள்ளே நுழைந்தது. 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு கூட குல்தீப் - ... மேலும் பார்க்க

`நான் நன்றாக விளையாடவில்லை; அதனால்தான்...'- இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சூர்யகுமார் யாதவ்

இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த பின்னர், அடுத்து இங்கிலாந்து அணியுடன் டி 20 போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறத... மேலும் பார்க்க

CT : பாகிஸ்தான் பெயரை இந்திய ஜெர்சியில் போட மறுக்கும் BCCI? - என்னதான் சொல்லப்போகிறது ICC?

இந்தியா vs பாகிஸ்தான்ஒரு ஐ.சி.சி தொடர் வருகிறதென்றால், அதில் இறுதிப்போட்டியை விடவும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், அத்தகைய சூழல் உருவாக்கப்படும் ஒரு போட்டி என்றால் அது இந்தியா vs பாகிஸ்தான் ஆட்ட... மேலும் பார்க்க

Gambhir: ``கம்பீர் நிச்சயம் அதைச் செய்வார்..." -இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற பிறகு, அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும், சாம்பியன் அணி அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்று பெரும் எதிர்பார்ப்பு கூ... மேலும் பார்க்க

Mohammed Shami: `ஓய்வை அறிவித்தால்..' -கம்பேக் குறித்து முகமது ஷமி சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட இருக்கிறார்.இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாட உள்ள ஷமிக்... மேலும் பார்க்க

Sachin: ``என்னுடைய அம்மாவுக்காக என் கடைசிப் போட்டி மும்பையில் நடந்தது'' - உண்மையைப் பகிர்ந்த சச்சின்

உலக கிரிக்கெட் வரலாற்றை எப்போது எழுதினாலும் அதில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார். மும்பையைச் சேர்ந்த இவர் சதங்களில் சதம், அதிக சர்வதேச ரன்கள், அதிக சர்வதேச போட... மேலும் பார்க்க