செய்திகள் :

CT : பாகிஸ்தான் பெயரை இந்திய ஜெர்சியில் போட மறுக்கும் BCCI? - என்னதான் சொல்லப்போகிறது ICC?

post image

ஒரு ஐ.சி.சி தொடர் வருகிறதென்றால், அதில் இறுதிப்போட்டியை விடவும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், அத்தகைய சூழல் உருவாக்கப்படும் ஒரு போட்டி என்றால் அது இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம்தான். மற்ற நாடுகளும் கிரிக்கெட் விளையாடுகின்றன, வெவ்வேறு அணிகளுடன் மோதுகின்றன என்றாலும், இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு இத்தகைய கிரேஸ் எப்போதும் இருப்பதற்கு முக்கிய காரணம், பொதுப்பார்வையில் அதற்குப் பின்னால் நீர்த்துப்போகாமல் பார்த்துக்கொள்ளப்படும் நுண்ணிய அரசியலும், அதனுள் கட்டமைக்கப்பட்டிருக்கும் வணிக நோக்கமும்தான்.

இந்தியா vs பாகிஸ்தான் | IND vs PAK

2008-ல் நிகழ்ந்த 26/11 சம்பவத்துக்குப் பிறகு இந்தியாவில் ஒரேயொரு முறை இரு அணிகளுக்குமிடையே இருதரப்பு தொடர் (2012-13) நடைபெற்றிருக்கிறது. அதுவும் ஒருநாள் போட்டித் தொடர். அந்தத் தொடரை பாகிஸ்தான் வென்றது. இருப்பினும், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்துக்குப் பிறகு பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்லாததாலும், அந்த சம்பவத்துக்குப் பிறகு ஐந்து முறை இந்தியா வந்து விளையாடிய பாகிஸ்தான் அணி இந்தியாவின் பிடிவாதத்தால் 2012-13க்குப் பிறகு இருதரப்பு தொடரில் விளையாட மறுப்பதாலும், ஐ.சி.சி தொடர், ஆசிய கோப்பை தொடரில் இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் மற்ற அணிகளின் போட்டிகளை விடவும் பெரிதாகக் காட்டப்படுகின்றன.

எதிர்பார்த்த பாகிஸ்தான்.... மறுத்த இந்தியா!

இத்தகைய சூழலில்தான், கடந்த 2017-ல் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பாகிஸ்தான் அணிதான், 2025-ல் சாம்பியன்ஸ் டிராபியை நடத்தப்போகிறது என்றதும், இந்தியா ஒன்றரை தசாப்தத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் விளையாடப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், வழக்கம் போல பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது என ஐ.சி.சி-யிடம் பி.சி.சி.ஐ தெரிவித்துவிட்டது.

Champions Trophy

மறுபக்கம், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள், `இந்தியா கட்டாயம் பாகிஸ்தானுக்கு வரவேண்டும். இந்தியாவில் ஐ.சி.சி தொடர் நடந்தால் நாங்கள் வருவதுபோல பாகிஸ்தானில் நடைபெறும் ஐ.சி.சி தொடருக்கு வரவேண்டும். அப்படி வரவில்லையென்றால் அது ஐ.சி.சி-யை அவமதிக்கும் செயல். இந்தியா பாகிஸ்தானுக்கு வருவது பா.ஜ.க அரசின் கையிலிருக்கிறது. இதில், அரசியல் வேண்டாம்.' என எவ்வளவோ கூறினார்கள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் இந்திய அணியின் வருகையை எதிர்பார்த்தது. இதில், சாம்பியன்ஸ் டிராபியால் நடைபெறும் வர்த்தகமும் அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம்.

ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபி

இருப்பினும், தங்களின் முடிவில் உறுதியாக இருந்த இந்திய அணி, ஹைபிரிட் மாடலில் தங்களின் போட்டிகளை மட்டும் வேறு நாட்டில் நடத்தினால் பங்கேற்போம், இல்லையென்றால் புறக்கணிப்புதான் என்று பிடிவாதமாக இருந்தது. ஒருபக்கம், பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி நடத்துவதற்காக மைதானங்களைச் சீரமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம் ஐ.சி.சி எதுவும் கூறாமல் அமைதியாகவே இருந்தது. இறுதியில், இந்திய இதில் பங்கேற்கும் வகையில் ஹைபிரிட் மாடலில் சாம்பியன்ஸ் டிராபியை நடத்துமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் ஐ.சி.சி கூறியது.

ICC

பி.சி.சி.ஐ-யின் ஆதிக்கம் மிகுந்த ஐ.சி.சி-யின் இத்தகைய கூற்றால், வேறு வழியில்லாமல் அதற்குச் சம்மதித்த பாகிஸ்தான் அணி, இனி இந்தியாவில் நடைபெறும் எந்தவொரு ஐ.சி.சி தொடரிலும் தங்களின் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துமாறு ஐ.சி.சி-யிடம் தெரிவித்தது. ஐ.சி.சி அதற்கு ஒப்புக்கொண்டது. அதன் பின்னர், இந்திய அணி ஆடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணையை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23-ம் தேதி துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது. இவ்வாறு, ஒருவழியாக எல்லாம் சரியாகச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், தற்போது புதிய சர்ச்சை ஒன்று வெடித்திருக்கிறது.

அதாவது, எந்தவொரு ஐ.சி.சி தொடராக இருந்தாலும், அதை நடத்தும் நாட்டின் பெயருடன் கூடிய டிராபியின் லோகோ அனைத்து அணிகளின் ஜெர்சிகளிலும் இடம்பெற்றிருக்கும். அதன்படி, இப்போது இந்த சாம்பியன்ஸ் டிராபி ஹைபிரிட் மாடலில் நடைபெற்றாலும், தொடரை பாகிஸ்தானே நடத்துகிறது. எனவே, அனைத்து அணிகளின் ஜெர்சியிலும் பாகிஸ்தான் பெயருடன் கூடிய சாம்பியன்ஸ் டிராபி லோகோ இடம்பெறவேண்டும். இந்த நிலையில், பாகிஸ்தான் பெயருடன் கூடிய லோகோ இந்திய அணியின் ஜெர்சியில் இடம்பெறுவதற்கு பி.சி.சி.ஐ மறுப்பு தெரிவித்திருப்பதாக பிரச்னை கிளம்பியிருக்கிறது.

BCCI

ஏற்கெனவே, சாம்பியன்ஸ் டிராபி தொடக்க விழாவுக்கு இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை அனுப்ப பி.சி.சி.ஐ மறுப்பதாகப் பேச்சுகள் அடிபடும் இந்த வேளையில் ஜெர்ஸி லோகோ பிரச்னை வந்திருக்கிறது. இதனால், விளையாட்டுக்குள் அரசியலைக் கலக்க வேண்டாம் என்று தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரியொருவர், `பி.சி.சி.ஐ கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டு வருகிறது. இது விளையாட்டுக்கு நல்லதல்ல. முதலில் பாகிஸ்தானில் விளையாடமாட்டோம் என்று கூறினார்கள்.

அடுத்து பாகிஸ்தானில் நடைபெறும் தொடக்க விழாவுக்கு ரோஹித்தை அனுப்ப அவர்கள் விரும்பவில்லை. இப்போது, ஜெர்சியில் தொடரை நடத்தும் நாட்டின் பெயரைப் போட அவர்கள் விரும்பவில்லை. இந்த விஷயத்தில், ஐ.சி.சி இதனை அனுமதிக்காமல் பாகிஸ்தானை ஆதரிக்கும் என்று நம்புகிறேன்.' என்று தெரிவித்தார். இந்த விவகாரம், விளையாட்டை எதற்கு அரசியலாக்குகிறீர்கள் என்ற கேள்வி பி.சி.சி.ஐ மீது பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.

சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா, பாகிஸ்தான் - ICC

அதேசமயம், `ஐ.சி.சி தொடரை நடத்தும் நாட்டின் பெயருடனான டிராபியின் லோகோவை ஒவ்வொரு அணியும் தங்களின் ஜெர்சியில் சேர்க்க வேண்டும். அந்த விதிக்கு இணங்க அனைத்து அணிகளும் கடமைப்பட்டிருக்கின்றன.' என ஐ.சி.சி தரப்பிலிருந்து தகவல் வெளியாகியிருக்கிறது. எனவே, சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தும்போது அதில் பாகிஸ்தான் பெயருடன் கூடிய லோகோ இடம்பெற்றிருக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ஜ்க்க வேண்டும். முன்னதாக இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் ஜெர்சியில், தொடரை நடத்தும் இந்தியாவில் பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் நடத்தும் இந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியின் அணுகுமுறை கூறியது தங்களின் கருத்துகளைக் கமெண்ட்டில் பதிவிடவும்.!

Yuzvendra Chahal: சஹால் கரியர், முடித்துவிட்ட BCCI? - அர்ஷ்தீப் வசம் செல்லும் அரிய சாதனை!

இந்திய கிரிக்கெட்டில் 2015 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர், ஒயிட் பால் ஃபார்மட்டில் அஷ்வின் - ஜடேஜா கூட்டணிக்கு மாறாக குல்தீப் - சஹால் உள்ளே நுழைந்தது. 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு கூட குல்தீப் - ... மேலும் பார்க்க

`நான் நன்றாக விளையாடவில்லை; அதனால்தான்...'- இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சூர்யகுமார் யாதவ்

இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த பின்னர், அடுத்து இங்கிலாந்து அணியுடன் டி 20 போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறத... மேலும் பார்க்க

Gambhir: ``கம்பீர் நிச்சயம் அதைச் செய்வார்..." -இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற பிறகு, அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும், சாம்பியன் அணி அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்று பெரும் எதிர்பார்ப்பு கூ... மேலும் பார்க்க

Mohammed Shami: `ஓய்வை அறிவித்தால்..' -கம்பேக் குறித்து முகமது ஷமி சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட இருக்கிறார்.இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாட உள்ள ஷமிக்... மேலும் பார்க்க

Sachin: ``என்னுடைய அம்மாவுக்காக என் கடைசிப் போட்டி மும்பையில் நடந்தது'' - உண்மையைப் பகிர்ந்த சச்சின்

உலக கிரிக்கெட் வரலாற்றை எப்போது எழுதினாலும் அதில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார். மும்பையைச் சேர்ந்த இவர் சதங்களில் சதம், அதிக சர்வதேச ரன்கள், அதிக சர்வதேச போட... மேலும் பார்க்க

Rishabh Pant: ``அணியை வழிநடத்தும்போது தோனியின் அந்த ஆலோசனையை..." - லக்னோ கேப்டன் பண்ட்

கடந்த 2022-ல் கார் விபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்து ஐ.பி.எல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாக காம்பேக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, நேராக ... மேலும் பார்க்க