செய்திகள் :

தலித் மணமகனின் குதிரை ஊர்வலத்திற்கு 200 போலீஸார் பலத்த பாதுகாப்பு!

post image

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டத்தில் தலித் இளைஞரின் திருமணத்தின் குதிரை ஊர்வல நிகழ்ச்சி, காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பில் நடைபெற்றது.

அஜ்மர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரேகர் எனும் தலித் இளைஞரின் திருமண நிகழ்ச்சியில், மணமகன் குதிரையின் மீது அமர்ந்து மணமகளின் கிராமத்தை நோக்கி ஊர்வலமாக செல்லும் பாரம்பரிய ’பிந்தோலி’ நிகழ்ச்சியில் ஆதிக்க சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்து தாக்குதல் நடத்துவார்கள் என்று உறவினர்கள் அச்சப்பட்டனர்.

இந்நிலையில், அதற்கு பாதுகாப்பு அளிக்குமாறு வேண்டி தன்னார்வலர்களின் உதவியோடு மணமகளின் குடும்பத்தினர் அம்மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.21) மணமகன் விஜய் ரேகரின் குதிரை சவாரி ஊர்வலத்திற்கு பாதுகாப்பு அளிக்க மாவட்ட அதிகாரிகளினால் சுமார் 200 காவல் துறையினர் பணியமர்த்தப்பட்டனர். அவர்களது பாதுகாப்பில் மணமகளின் லவேரா கிராமத்தை நோக்கி எந்தவொரு அசம்பாவிதமும் இன்றி அந்த குதிரை ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிக்க: 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலியான விவகாரம்..ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

இதுகுறித்து அஜ்மர் மாவட்ட காவல் துறை அதிகாரி வந்தித்தா ராணா கூறுகையில், தலித் இளைஞரின் திருமண ஊர்வலத்தில் எந்தவொரு அசம்பாவித தாக்குதல் சம்பவங்களும் நடைபெறக்கூடாது என அந்த கிராம மக்களுடன் ஆலோசனை நடைபெற்றதாகவும், அதில் கிராமவாசிகள் உறுதி அளித்ததாகவும் அவர் கூறினார்.

முன்னதாக, தலித் சமூகத்தைச் சார்ந்தவர்களின் திருமண ஊர்வலங்களில் ஆதிக்க சாதியினர் தாக்குதல் நடத்திய சம்பவங்களினால் அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியை நாடியதாக மணமகளின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால், அம்மாவட்டத்தின் பல காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸார் இந்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இருப்பினும், அந்த ஊர்வலத்தின்போது வழக்கமாக வெடிக்கப்படும் பட்டாசுகளும் இசை கச்சேரிகளும் தவிர்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பிய பாப் பாடகருக்கு மரண தண்டனை!

ஈரான் நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் இசை பாடகர் ஒருவர் இறைத்தூதர் குறித்து அவதூறு பரப்பியதற்காக அவருக்கு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.ஈரானை சேர்ந்த பிரபல பாப் இசை பாடகரான டட்டலூ என்... மேலும் பார்க்க

மத்திய அமைச்சருடன் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் சந்திப்பு!

பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர் இன்று(புதன்கிழமை) மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசியுள்ளனர்.மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் ... மேலும் பார்க்க

பெண் தளபதி உள்பட 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் இன்று (ஜன.22) காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கி சூட்டில் பெண் தளபதி உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.போகாரோ மாவட்டத்தின் பன்ஷி ஜர்வா வனப்பகு... மேலும் பார்க்க

சிறுவாபுரி செல்லும் பக்தர்களுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்!

சிறுவாபுரி முருகன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களுக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு புதிய செய்தியை தெரிவித்துள்ளார்.பக்தர்களின் வசதிக்காக திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து திர... மேலும் பார்க்க

100 கிலோ கஞ்சா பறிமுதல்! 3 பேர் கைது!

ஒடிசா மாநிலம் புவனேசுவர் மாவட்டத்தில் 100 கிலோ அளவிலான கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்மாவாட்டத்தின் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினர் க... மேலும் பார்க்க

மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!

சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது பற்ற... மேலும் பார்க்க