`சைத்ராவும் நட்சத்திராவும் 'உருட்டு'னு சொன்னது ரொம்பவே காயப்படுத்திடுச்சு’ - ஜெய...
100 கிலோ கஞ்சா பறிமுதல்! 3 பேர் கைது!
ஒடிசா மாநிலம் புவனேசுவர் மாவட்டத்தில் 100 கிலோ அளவிலான கஞ்சா கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்மாவாட்டத்தின் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினர் கொர்தா-சந்தக்கா சாலையில் நேற்று (ஜன.21) இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, சந்தேகம்படும்படியான காரை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது அந்த வாகனத்தில் மேற்கு வங்கம் மாநிலத்தின் கந்தமால் இருந்து கடத்தி வரப்பட்ட 100 கிலோ அளவிலான கஞ்சா இலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையும் படிக்க: ரூ. 15,000 கோடி சொத்துகளை இழக்கும் சைஃப் அலிகான் குடும்பம்!
இதனைத் தொடர்ந்து, அந்த வாகனத்தில் வந்த 3 பேரை கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மேலும், அவர்கள் மூவரின் மீதும் போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.