I won't miss any of Soubin and Suraj Venjaramoodu's movies! - Gautam Vasudev Men...
பெண் தளபதி உள்பட 2 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை!
ஜார்க்கண்ட் மாநிலம் போகாரோ மாவட்டத்தில் இன்று (ஜன.22) காலை பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கி சூட்டில் பெண் தளபதி உள்பட 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
போகாரோ மாவட்டத்தின் பன்ஷி ஜர்வா வனப்பகுதியில் ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையின் 209 வது பிரிவு கோப்ரா படையினரும் இணைந்து நக்சல்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, மாவோயிஸ்டுகளுடனான துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதில், கிரித் மாவட்டத்தின் சத்ரோ கிராமத்தைச் சேர்ந்த மாவோயிஸ்டுகளின் பெண் தளபதி சாந்தி மற்றும் தவத்தார் கிராமத்தைச் சேர்ந்த மனோஜ் என்பவரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதையும் படிக்க: 100 கிலோ கஞ்சா பறிமுதல்! 3 பேர் கைது!
மேலும், அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கி மற்றும் இன்ஸாஸ் ரக துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொல்லப்பட்ட சாந்தியின் கணவரான ரண்விஜய் மஹாத்தோ என்பவர் பாதுகாப்புப் படையினரால் மிகவும் தேடப்பட்டு வந்த மாவோயிஸ்டு பயங்கரவாதி ஆவார். அவரை, பிடிக்க சுமார் ரூ.15 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நேற்று (ஜன.21) காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.