செய்திகள் :

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்!

post image

தோரணமலை தைப்பூசம்: 48 நாள்களுக்குள் நீங்கள் விரும்பியவாறே வாழ்க்கை மாற சங்கல்பியுங்கள்! 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன.

சிறப்பு சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

தோரணமலை தைப்பூசம்

எத்தனை நேர்மையாக வாழ்ந்தாலும் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வருகிறதா! நல்லவராக வாழ்வதே தவறா என்று நினைக்கத் தோன்றுகிறதா! கவலைப்படாதீர்கள்! தோஷம், பாவம், கர்மவினை என எதுவாக இருந்தாலும் அதை தீர்க்கவல்லவன் முருகன் ஒருவனே. கந்தனை சரண் அடைந்தால் சகல தெய்வங்களும் துணை நிற்பர் என்பது புராணம் கூறும் செய்தி. எண்ணியவை அருளும் கலியுக தெய்வம் கந்தன் ஒருவனே.

உலகில் நீர் தோன்றிய நாள் தைப்பூசம். நீரிலிருந்தே சகல ஜீவன்களும் தோன்றியது என்கிறது புராணம். முருகப்பெருமானைக் கொண்டாடும் விழாக்களில் முதன்மையானது தைப்பூசம். இந்நாளில் ஈசனையும், ஈசனின் மகனையும் தரிசித்து வரங்கள் பெறுவது தொன்றுதொட்ட ஐதிகம். பிறவிப்பிணி உடல் பிணியை ஒருசேரத் தீர்க்கும் அற்புத நன்னாள் தைப்பூசம். வேண்டிய வரங்களை வேண்டிய வண்ணமே அருளும் இத்திருநாளில் சக்தி விகடன் வாசகர்களுக்காக ஒரு சிறப்பு சங்கல்ப பூஜையை நடத்த இருக்கிறோம். வேண்டியதை விரைவாக அருளும் இந்த மகா சங்கல்ப பூஜையை சித்தர்கள் உலாவும் தோரணமலையில் நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்.

தோரணமலை சங்கல்ப விழா

மேற்கு தொடர்ச்சி மலையின் முதல் மலையாக தோரண வாயிலாக அமைந்து இருக்கும் தோரணமலையில் அருளும் முருகப்பெருமானை ஆராதிக்கும் விழாவாக இந்த தைப்பூசம் அமைய உள்ளது. இங்குதான் தைப்பூச நாளில் அதாவது பிப்ரவரி 11-ம் நாள் மகா சங்கல்ப பூஜையும் ஆராதனைகளும் நடைபெற உள்ளது. தென்காசியில் இருந்து கடையம் செல்லும் சாலையில் அமைந்திருக்கிறது தோரணமலை. இதன் உச்சியிலும் அடிவாரத்திலும் என இரண்டு இடங்களிலும் அழகிய முருகன் கோயில் அமைந்துள்ளது. யானை அமர்ந்து இருப்பதைப்போல காட்சியளிப்பதால் இது வாரண மலை என்று அழைக்கப்படுகிறது. அதேபோல சித்தர் பெருமக்கள் அகத்தியர் தலைமையில் கூடி நோய்களுக்கான காரணங்களை அலசி மருந்துகள் தயாரித்த மலை என்பதால் இது காரண மலை என்றும் அழைக்கப்படுகிறது.

காலமறியா காலத்தே சிறந்து விளங்கிய இந்த மலை ஸ்ரீராமர், முருகப்பெருமான், அகத்தியர், தேரையர் முதல் பாரதியார் வரை போற்றப்பப்பட்ட புண்ணிய தலமிது. மகாபாரத காலத்திலும் இந்த மலை ஆரவல்லி, சூரவல்லி தங்கிய மலை இது என்றும் கூறப்படுகிறது. அகத்தியர் காலத்தே இங்கு மாபெரும் மருத்துவ பல்கலைக் கழகம் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. பல சித்தர்கள் கூடி இங்கு பல்வேறு மருத்துவப் பிரிவுகள் இயங்கியது என்றும் உலகெங்கும் இருந்து பல மாணவர்கள் இங்கு வந்து தங்கி இருந்து பயின்றனர் என்றும் கூறப்படுகிறது.

தோரணமலை

இந்த பிரமாண்ட மலையின் அடிவாரத்தில் ஸ்ரீவல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, ஸ்ரீகுருபகவான், ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீசரஸ்வதி, சப்த கன்னிமார்கள், ஸ்ரீகன்னிமாரம்மன், நாகர்கள் ஆகிய சந்நிதிகளை தரிசிக்கலாம். அடிவாரக் கோயிலை கடந்து மலை மீது ஏறினால் சுமார் 1,000 படிகள் கடந்து மேலே சென்றால் உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம். அங்குதான் அகத்தியர் பிரதிஷ்டை செய்த முருகப்பெருமானை தரிசிக்கலாம். அழகிய பெருமானை மனமுருகி வழிபட்டால் வந்த வினை தீரும்; வரும் வினைகள் விலகும் என்கிறார்கள். இங்குதான் தேரையரின் ஜீவசமாதியும் அமைந்துள்ளது என்பது சிறப்பு. அகத்தியரோடு இங்கு வாழ்ந்த தேரையர் பல்வேறு மருத்துவ கண்டுபிடிப்புகளை உலகுக்கு அளித்து 700 ஆண்டுகள் வாழ்ந்து இங்கேயே உடலை உதிர்த்தார் எனப்படுகிறது. எனினும் இன்றும் இவரை ஒளி வடிவமாக தரிசித்தவரும் உண்டு.

சிறப்பு சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

மலையெங்கும் அபூர்வ மூலிகைகள் காணப்படுவதால் இங்கு வீசும்காற்றை சுவாசித்தாலே போதும், உடல் பிணிகள் யாவும் நீங்கிவிடும் என்கிறார்கள். புகழ்பெற்ற இந்த தோரணமலை முருகப்பெருமான் ஆலயத்தில் இந்த ஆண்டு தைப்பூச நன்னாளான பிப்ரவரி 11-ம் நாள் (2025) பல ஆராதனைகள் விமரிசையாக நடைபெற உள்ளது. அதிகாலை 5 மணிக்கு கணபதி ஆராதனை தொடங்கி, மூலவர் – உற்சவமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், திருக்கல்யாணம், வீதி உலா, போன்ற வைபவங்கள் நடைபெற உள்ளன. விழாவின் சிறப்பாக இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட தியாகிகள், இந்தியப்போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், உழவர் பெருமக்கள், சாதனை புரிந்த நல்லோர் என விசேஷமான அன்பர்களுக்கு பாராட்டும் மரியாதையும் செய்யப்பட உள்ளது. பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், அவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் போன்றவையும் அன்னதானமும் நடைபெற உள்ளன.

தோரணமலை

சிறப்புகள் வாய்ந்த இந்த தைப்பூச விழாவை சிறப்பிக்க உங்கள் சக்தி விகடனும் தோரணமலை முருகப்பெருமான் திருக்கோயில் நிர்வாகமும் இணைந்து நடத்தும் இந்த சங்கல்ப விழாவில் சங்கல்பித்துக் கொண்டால் ஆயுள் ஆரோக்கியம் கூடும். நிலைத்த மங்கல வாழ்வு, விரும்பிய எண்ணங்கள் கைகூடும். வேலை வாய்ப்பு, வியாபார விருத்தி, செல்வவளம் யாவும் கிட்டும். மேலும் அச்சமற்ற நிலை, நிம்மதியான வாழ்வு, உறவுப் பிரச்னைகள் அற்ற சூழல், சொத்து தொடர்பான தொல்லைகள் நீங்கும் என்கிறார்கள். ஆரோக்கியம் பெருகவும், ஐஸ்வர்யங்கள் பெருகவும் இந்த சிறப்பு மிக்க ஹோமம் நிச்சயம் அருளும் என்கிறார்கள்.

வாசகர்களின் கவனத்துக்கு!

இந்த சங்கல்ப வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக விபூதி, ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் - புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம்.

குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.

சிறப்பு சங்கல்பம் செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07

QR CODE FOR THORANAMALAI EVENT REGISTRATION:

QR CODE FOR THORANAMALAI EVENT REGISTRATION

ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யம் அருளும் தோரணமலையில் தைப்பூச சங்கல்ப விழா - நீங்களும் சங்கல்பிக்கலாம்!

தோரணமலை சங்கல்ப விழா: 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. இங்கு முருகனை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் சகல நோய்களும் தீ... மேலும் பார்க்க

கும்பமேளா : உலகின் மிகப்பெரிய பக்தி திருவிழா... கோடிக்கணக்கில் கூடும் பக்தர்கள் | kumbh mela Album

மகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா கும்பமேளாமகா க... மேலும் பார்க்க

தை மாதப் பலன்கள்: `மேஷம் முதல் துலாம் வரை'- யாருக்கு என்ன யோகம்?

தை மாத ராசிபலன்: ஜனவரி 14 முதல் பிப்ரவரி 12 வரை மேஷம் முதல் துலாம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன்..மே... மேலும் பார்க்க

தை மாதப் பலன்கள்: `விருச்சிகம் முதல் மீனம் வரை'- யாருக்கு என்ன யோகம்?

தை மாத ராசிபலன்: ஜனவரி 14 முதல் பிப்ரவரி 12 வரை விருச்சிகம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன் அதிர்ஷ்டக் குறிப்புகள் மற்றும் வழிபாடுகள் குறித்து கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ'முருகப்ரியன... மேலும் பார்க்க

பொங்கல் தரிசனம்: 12 சூரியன்கள், ஸ்படிக வழிபாடு - வியக்க வைக்கும் சூரிய தகவல்கள்

சூரிய வழிபாட்டுக்கு மிக உகந்த நாள் தைப்பொங்கல் திருநாள். அன்று ஆன்ம காரகனான சூரியதேவனை வழிபடுவதால், நீண்ட ஆயுள் கிடைக் கும். நோயில்லா வாழ்க்கை வரமாகக் கிடைக்கும்; சூரிய கடாட்சத் தால் செல்வம் பெருகும்.... மேலும் பார்க்க

Kumbh Mela: `ரூ.7,500 கோடி பட்ஜெட்; 40 கோடி பக்தர்கள்; 1.6 லட்சம் டென்ட்கள்’ - கும்பமேளா ஏற்பாடுகள்

கும்பமேளா கொண்டாட்டம்வட இந்திய இந்துக்களின் முக்கிய திருவிழாக்களில் மகா கும்பமேளாவும் ஒன்று. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விழா கொண்டாடப்படுகிறது. உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ், உத்தரகாண்ட் மாநிலம... மேலும் பார்க்க