செய்திகள் :

`நான் நன்றாக விளையாடவில்லை; அதனால்தான்...'- இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து சூர்யகுமார் யாதவ்

post image
இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை இழந்த பின்னர், அடுத்து இங்கிலாந்து அணியுடன் டி 20 போட்டித் தொடரில் விளையாட இருக்கிறது.

இந்த தொடர் இன்று கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்து இருந்தது. அதில் அதிரடி ஆட்டக்காரரான சூர்யகுமார் யாதவ் இடம்பெறவில்லை.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சூர்யகுமார் யாதவ், "சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது எனக்கு ஏன் வருத்தமளிக்க வேண்டும். நான் சரியாக விளையாடியிருந்தால், சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பேன். நான் ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.

அதேவேளையில், சாப்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியைப் பாருங்கள். அணி மிகவும் வலுவாக உள்ளது. அணியில் இடம்பெற்றுள்ள அனைவரும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். அவர்கள் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார்கள்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

மேலும் அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்கள். அவர்களை நினைத்து எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று பேசியிருக்கிறார்.

Yuzvendra Chahal: சஹால் கரியர், முடித்துவிட்ட BCCI? - அர்ஷ்தீப் வசம் செல்லும் அரிய சாதனை!

இந்திய கிரிக்கெட்டில் 2015 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பின்னர், ஒயிட் பால் ஃபார்மட்டில் அஷ்வின் - ஜடேஜா கூட்டணிக்கு மாறாக குல்தீப் - சஹால் உள்ளே நுழைந்தது. 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்கு கூட குல்தீப் - ... மேலும் பார்க்க

CT : பாகிஸ்தான் பெயரை இந்திய ஜெர்சியில் போட மறுக்கும் BCCI? - என்னதான் சொல்லப்போகிறது ICC?

இந்தியா vs பாகிஸ்தான்ஒரு ஐ.சி.சி தொடர் வருகிறதென்றால், அதில் இறுதிப்போட்டியை விடவும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும், அத்தகைய சூழல் உருவாக்கப்படும் ஒரு போட்டி என்றால் அது இந்தியா vs பாகிஸ்தான் ஆட்ட... மேலும் பார்க்க

Gambhir: ``கம்பீர் நிச்சயம் அதைச் செய்வார்..." -இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் புகழாரம்!

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற பிறகு, அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றதும், சாம்பியன் அணி அடுத்தகட்டத்துக்குச் செல்லும் என்று பெரும் எதிர்பார்ப்பு கூ... மேலும் பார்க்க

Mohammed Shami: `ஓய்வை அறிவித்தால்..' -கம்பேக் குறித்து முகமது ஷமி சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் விளையாட இருக்கிறார்.இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் அவர் இந்திய அணிக்காக விளையாட உள்ள ஷமிக்... மேலும் பார்க்க

Sachin: ``என்னுடைய அம்மாவுக்காக என் கடைசிப் போட்டி மும்பையில் நடந்தது'' - உண்மையைப் பகிர்ந்த சச்சின்

உலக கிரிக்கெட் வரலாற்றை எப்போது எழுதினாலும் அதில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தவிர்க்க முடியாத வீரராக இருப்பார். மும்பையைச் சேர்ந்த இவர் சதங்களில் சதம், அதிக சர்வதேச ரன்கள், அதிக சர்வதேச போட... மேலும் பார்க்க

Rishabh Pant: ``அணியை வழிநடத்தும்போது தோனியின் அந்த ஆலோசனையை..." - லக்னோ கேப்டன் பண்ட்

கடந்த 2022-ல் கார் விபத்துக்குள்ளான இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், கடந்த ஆண்டு அதிலிருந்து முழுமையாக மீண்டு வந்து ஐ.பி.எல்லில் டெல்லி அணிக்கு கேப்டனாக காம்பேக் கொடுத்தார். அதைத்தொடர்ந்து, நேராக ... மேலும் பார்க்க