செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: கேப்டன்கள் போட்டோஷுட்டை புறக்கணிக்கும் ரோஹித்?

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான கேப்டன்கள் படப்பிடிப்பு பாகிஸ்தானில் நடைபெறும் நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா புறக்கணிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இந்திய வீரர்கள் அணியும் ஜெர்சியில் ஹோஸ்ட் நாடான பாகிஸ்தானின் பெயரை பொறிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்துகிறது.

பாதுகாப்பு காரணத்துக்காக பாகிஸ்தான் பயணிக்க இந்திய அணி மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபையில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

ரோஹித் புறக்கணிப்பு?

ஐசிசி தொடருக்கு முன்னதாக கேப்டன்கள் சந்திப்பு நடைபெறுவது வழக்கம். போட்டியை ஹோஸ்ட் செய்யும் நாட்டில் அனைத்து அணி கேப்டன்களும் சந்தித்து கோப்பையுடன் குழுப் படம் எடுத்துக் கொள்வார்கள்.

இந்த சந்திப்பானது பாகிஸ்தானில் பிப். 17 அல்லது 18 ஆம் தேதி கராச்சியில் நடைபெறும் நிலையில், ரோஹித் சர்மா பங்கேற்கப் போவதில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய கிரிக்கெட் வாரியம் ரோஹித் சர்மா பங்கேற்பாரா? அல்லது பங்கேற்க மாட்டாரா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ செய்தியை வெளியிடவில்லை.

இதையும் படிக்க : சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயருக்கு பிசிசிஐ மறுப்பு!

முன்னதாக, ஹோஸ்ட் நாடான பாகிஸ்தானின் பெயரை இந்திய வீரர்களின் ஜெர்சியில் பொறிக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனை விமர்சித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர், விளையாட்டில் இந்தியா அரசியல் செய்வதாகவும், ஐசிசி இதனை ஏற்றுக் கொள்ளாது என்றும் தெரிவித்திருந்தார்.

மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்பும் ஏபிடி வில்லியர்ஸ்! ஆர்சிபியில் விளையாடுவாரா?

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஏபிடி வில்லியர்ஸ் மீண்டும் கிரிக்கெட் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளார். 114 டெஸ்ட், 228 ஒருநாள், 78 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார் ஏபிடி வில்லியர்ஸ்... மேலும் பார்க்க

தன்னம்பிக்கை மட்டும் போதும்: டி20யில் மீண்டும் களமிறங்கும் முகமது ஷமி!

இந்திய வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி காயத்திலிருந்து குணமாகி மீண்டு வருவேன் என தான் நம்பவில்லை எனக் கூறியுள்ளார்.கடைசியாக ஒருநாள் உலகக் கோப்பை போட்டி 2023இல் விளையாடிய முகமது ஷமி கணுக்கால் காயம் கார... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பெயரை கட்டாயம் ஜெர்சியில் பொறிக்க வேண்டும்: ஐசிசி

பாகிஸ்தான் பெயர் பொறிக்கப்பட்ட ஜெர்சிதான் அனைத்து அணிகளும் அணிய வேண்டும் என்று ஐசிசி நிர்வாகி தெளிவுபடுத்தியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்த தொடரை பா... மேலும் பார்க்க

ரஞ்சி போட்டி: ரோஹித் சர்மா தீவிர பயிற்சி!

ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்த... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: இந்திய வீரர்கள் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயருக்கு பிசிசிஐ மறுப்பு!

சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான இந்திய அணியின் ஜெர்சியில் பாகிஸ்தான் பெயரை பொறிக்க இந்திய கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம்... மேலும் பார்க்க

முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.அதிரடி பேட்டா் சூா்யகுமாா் யாதவ் தலைமையில் களம் காணும் இந்திய அணியில், பிரதான வேகப்பந்து வீச்சாளா் முகம... மேலும் பார்க்க