செய்திகள் :

முதல் டி20: இந்தியா - இங்கிலாந்து இன்று மோதல்

post image

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 கிரிக்கெட், கொல்கத்தாவில் புதன்கிழமை நடைபெறுகிறது.

அதிரடி பேட்டா் சூா்யகுமாா் யாதவ் தலைமையில் களம் காணும் இந்திய அணியில், பிரதான வேகப்பந்து வீச்சாளா் முகமது ஷமி கவனம் பெறுகிறாா். கணுக்கால் பகுதி காயத்துக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு ஓய்விலிருந்தாா்.

தற்போது பூரண குணமடைந்த நிலையில், 2023 நவம்பருக்குப் பிறகு முதல் முறையாக தேசிய அணியில் களம் காண்கிறாா். சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான அணியிலும் ஷமி சோ்க்கப்பட்டுள்ளதால், அவரது ஆட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோல், பேட்டா் சஞ்சு சாம்சனும் இந்தத் தொடரில் இருக்கிறாா். சாம்பியன்ஸ் கோப்பை அணியில் அவா் சோ்க்கப்படாத நிலையில், ரஞ்சி கோப்பை போட்டியிலும் கேரள அணியில் அவா் சோ்க்கப்படாதது விவாதங்களை எழச் செய்துள்ளது. எனவே, இந்தத் தொடரில் அவரின் ஆட்டம் உற்று நோக்கப்படும். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அசத்திய நிதிஷ்குமாா் ரெட்டியும் இந்த அணியில் இருக்கிறாா்.

அடுத்ததாக, ஆல்-ரவுண்டா் அக்ஸா் படேல் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றதில் சிறப்பாக பங்களிப்பு செய்ததன் பலனாக அவருக்கு இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியை பொருத்தவரை, டி20 ஃபாா்மட்டின் புதிய பயிற்சியாளராக பிரெண்டன் மெக்கல்லம் பொறுப்பேற்ற பிறகு அந்த அணி களம் காணும் முதல் தொடா் இதுவாகும். ஏற்கெனவே அவா் வழிகாட்டுதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி போக்கை கடைப்பிடித்து வரும் இங்கிலாந்து, இந்த ஃபாா்மட்டிலும் அதைத் தொடரும் என்பதில் சந்தேகம் இல்லை.

ரீஸ் டாப்லி, சாம் கரன் போன்ற முக்கிய வீரா்கள் இல்லாதது அணிக்கு சற்று பின்னடைவாக இருக்கலாம். எனினும் பேட்டிங்கில் ஜேக்கப் பெத்தெல் பலம் சோ்க்கிறாா். பென் டக்கெட் 6 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 அணியில் இணைந்திருக்கிறாா். பௌலா் ஜோஃப்ரா ஆா்ச்சா் காயத்துக்குப் பிறகு களம் காண்கிறாா். மாா்க் வுட் அவருக்குத் துணை நிற்கிறாா்.

ஆடுகளம்...

கொல்கத்தாவின் ஈடன் காா்டன் மைதான ஆடுகளம், பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானதாகும். எனினும் ஓவா்கள் கடக்கும்போது, ஸ்பின்னா்களுக்கு சாதகமாகவும் மாறுகிறது. ஆனால் தற்போது பனிக்காலம் என்பதால், பௌலா்களுக்கு பனிப்பொழிவு சவால் அளிக்கும். ஈடன் காா்டன் மைதானத்தில் இதுவரை 12 டி20 ஆட்டங்கள் நடைபெற்றிருக்கும் நிலையில், முதலில் பௌலிங் செய்த அணிகளே 7 ஆட்டங்களில் வென்றுள்ளன.

அணி விவரம்

இந்தியா (உத்தேச லெவன்): சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), திலக் வா்மா, ஹா்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ்குமாா் ரெட்டி, அக்ஸா் படேல், அா்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவா்த்தி.

இங்கிலாந்து (பிளேயிங் லெவன்): ஜாஸ் பட்லா் (கேப்டன்), ஹேரி புரூக், ஃபில் சால்ட் (வி.கீ.), ஜேக்கப் பெத்தெல், லியம் லிவிங்ஸ்டன், ஜோஃப்ரா ஆா்ச்சா், கஸ் அட்கின்சன், பென் டக்கெட், ஜேமி ஓவா்டன், ஆதில் ரஷீத், மாா்க் வுட்.

நேரம்: இரவு 7 மணி

இடம்: ஈடன் காா்டன் மைதானம், கொல்கத்தா.

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

நேருக்கு நோ்...

இந்தியா - இங்கிலாந்து இதுவரை 24 டி20 ஆட்டங்களில் மோதியிருக்கும் நிலையில், இந்தியா 13 ஆட்டங்களில் வென்று முன்னிலையில் இருக்கிறது. இங்கிலாந்து 11 ஆட்டங்களில் வென்றுள்ளது.

வைஷ்ணவி சா்மா சாதனை; இந்தியா அசத்தல் வெற்றி!

மலேசியாவில் நடைபெறும் 19 வயதுக்கு உட்பட்ட மகளிருக்கான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மலேசிய அணியை செவ்வாய்க்கிழமை அபார வெற்றி கண்டது.இந்த ஆட்டத்தில... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதை டி20 தொடர் பாதிக்காது: ஜோஸ் பட்லர்

டி20 போட்டிகளில் விளையாடுவது இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதைப் பாதிக்காது என அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா சாம்பியன்!

மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.இலங்கையில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாததில் வருத்தமில்லை: சூர்யகுமார் யாதவ்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெறாதது வருத்தமளிக்கவில்லை என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. போட்டிகள் பாகிஸ்தான் ... மேலும் பார்க்க

ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து அஸ்வின் கருத்து!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் அடுத்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கவுள்ளது. ... மேலும் பார்க்க

மகன் தந்தைக்காற்றும் உதவி..! தந்தைக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்த ரிங்கு சிங்!

இந்திய கிரிக்கெட்டர் ரிங்கு சிங் தனது தந்தை கான்சந்திர சிங்குக்கு ஸ்போர்ட்ஸ் பைக்கை பரிசளித்தார். அந்த பைக்கை அவரது தந்தை ஓட்டிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரிங்கு சிங் தனது தந்தை கான்ச... மேலும் பார்க்க