Career: 'இந்த' துறையில் டிப்ளமோ படித்தவரா நீங்கள்... மத்திய அரசு நிறுவனத்தில் வே...
மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா சாம்பியன்!
மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இலங்கையில் கடந்த ஜனவரி 12 ஆம் தேதி முதல் தொடங்கிய மாற்றுத் திறனாளிகளுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின.
இதையும் படிக்க: சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் இடம்பெறாததில் வருத்தமில்லை: சூர்யகுமார் யாதவ்
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 197 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய யோகேந்திர பதோரியா 40 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்தியா சாம்பியன்
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி, 19.2 ஓவர்களின் முடிவில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ராதிகா பிரசாத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கேப்டன் விக்ராந்த் கெனி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.