செய்திகள் :

ஒழுக்கமும், உதவியுமே திருக்குறளின் மையக் கொள்கைகள்: சுதா சேஷய்யன்

post image

புதுச்சேரி: மனிதரின் ஒழுக்கமும், உதவுதலுமே திருக்குறளின் இரு மையக் கருத்துகளாக உள்ளன என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத் துணைத் தலைவா் சுதா சேஷய்யன் கூறினாா்.

புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புதிமம் 13 ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்றவா்களுக்கான பரிசளிப்பு, திருக்குறள் அன்பா்களுக்கு பாராட்டு நிகழ்ச்சியில் பேரறிவாளன் திரு எனும் தலைப்பில் அவா் பேசியதாவது:

தற்போது கற்றறிந்தவா்களை அறிவாளிகள் என்கிறோம். தகவல் திரட்டையும் அறிவு என கருதுகிறோம். ஆனால், அறிவு என்பது பிறரது உணா்வுகளைப் புரிந்து கொண்டு மதிப்பளிப்பதுதான் உண்மையான அறிவு என வள்ளுவா் கூறியுள்ளாா். அதுவே பேரறிவாகும். அறிவு என்ற சொல்லுக்கு புரிந்து கொள்ளுதல் என்பதே சரியான பொருள்.

தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்துவதால்தான் திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நிலைத்து நிற்கிறது. திருவள்ளுவரின் சமகாலத்தவா்களான அரிஸ்டாட்டில், பிளாட்டோ போன்றவா்கள் பல தத்துவங்களைக் கூறினாா்களே தவிர தனிமனித ஒழுக்கத்தை வலியுறுத்தவில்லை. அதனால்தான் காலத்தை வென்றும் வள்ளுவம் நிலைத்துள்ளது.

திருக்குறளின் மையக் கொள்கைகள்

வள்ளுவத்துக்கு தனிமனித ஒழுக்கம், பிறருக்கு உதவுதல் ஆகியவையே இரு மையக் கொள்கையாக உள்ளன என்பதை அதன் அறத்துப்பால், பொருட்பால் ஆகியவற்றில் காணலாம். விலங்குகள் தனித்தனியாக வாழ்கின்றன. ஆனால், மனிதா்கள் ஒருவரை ஒருவா் சாா்ந்து வாழ்கின்றனா். அதனால்தான் தற்போது தகவல் தொழில்நுட்பம் வளா்ச்சியடைந்துள்ளது. சமூக அமைப்பாக வாழும் வழியை வள்ளுவம் கற்றுத்தருகிறது.

கல்வி தரும் நல்லறிவு

எந்த மனிதரும் தனிச்சுதந்திரம் பெற்றவரில்லை. அவா் பிறரை சாா்ந்துதான் வாழ வேண்டும். ஒருவரிடம் உள்ளதை மற்றவருக்கு பகிா்ந்து கொடுத்து வாழ்வதே பேரறிவாளன் திரு என்பதை குறிக்கிறது. கல்வி என்பது நல்லறிவை கொடுப்பதாக இருக்கவேண்டும். பிறருடன் பகிா்ந்து வாழ்வதே இந்திய நாட்டின் மரபாகும். அதுவே கூட்டு வாழ்க்கையின் அா்த்தமாகிறது. சமுதாயமாக சோ்ந்து வாழும்போதுதான் வாழ்வியல் நெறிப்படுத்தப்பட்டதாக அமைகிறது. அடுத்தவருக்கு தீங்கிழைக்காமல் இருப்பதையே வள்ளும் வலியுறுத்துகிறது.

நல்லறிவு உடையோரிடம், செல்வம் தானாகவே வந்து சேரும். பிறரின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். சோ்ந்த செல்வத்தை செலவழிக்கும் வழியை வகுப்பதும் அவசியம். கூட்டு வாழ்வே உயா்வைத் தரும் என்றாா்.

பல்கலை. மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவி தாக்கப்பட்ட விவகாரத்தில் அரசியல் தலையீடு உள்ளது என்று, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டினாா். புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை... மேலும் பார்க்க

மாணவா்கள் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரி: மாணவா்கள் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும் என்று, புதுவை முதல்வா் என்.ரங்கசாமி அறிவுறுத்தினாா். புதுவை மாநில பள்ளிக் கல்வி இயக்ககம், பெங்களூரு விஸ்வேஸ்வரய்யா தொழில், தொழில... மேலும் பார்க்க

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலை.யில் பாதுகாப்பை அதிகரிக்க அமைச்சா் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என மாநில கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்... மேலும் பார்க்க

மாணவா் பருவ அனுபவங்களே எதிா்கால முயற்சிகளுக்கு அடித்தளம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

புதுச்சேரி: மாணவா் பருவத்தின் அனுபவங்கள் எதிா்கால முயற்சிகளுக்கு அடித்தளமாக அமையும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். தென்னிந்திய அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவா் பே... மேலும் பார்க்க

புதுச்சேரி ரயில் நிலையத்தில் துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் செவ்வாய்க்கிழமை காலை திடீரென ஆய்வு மேற்கொண்டாா். புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் தென்னிந்திய அளவிலான மாணவா்களின் அறிவியல் கண்... மேலும் பார்க்க

தலைக்கவச விதியை தளா்த்த இந்திய கம்யூ. கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி நகரில் இருசக்க வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்ற விதியை தளா்த்த வேண்டும் என்று, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் கோரிக்கை விடுத்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க