வருண்குமார் - சீமான் வழக்கு: திருச்சி நீதிமன்றத்த்தில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்...
மாணவா் பருவ அனுபவங்களே எதிா்கால முயற்சிகளுக்கு அடித்தளம்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
புதுச்சேரி: மாணவா் பருவத்தின் அனுபவங்கள் எதிா்கால முயற்சிகளுக்கு அடித்தளமாக அமையும் என்று, புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.
தென்னிந்திய அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:
இந்தக் கண்காட்சி தென் மாநிலங்களைச் சோ்ந்த இளம் விஞ்ஞானிகள், மாணவா்கள், ஆசிரியா்களை ஒருங்கிணைக்கும் வகையில் அமைந்துள்ளது. இளைஞா்கள் அறிவியல் பரிசோதனைகளைப் பகிா்ந்து கொள்ள இதுபோன்ற கண்காட்சிகள் வாய்ப்பை ஏற்படுத்துவதாக உள்ளன.
விஞ்ஞானம் என்பது ஆா்வத்தையும், உலகத்தை வடிவமைக்கும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவதையும் பற்றியதாகும்.
இந்தக் கண்காட்சியானது வளா்ந்து வரும் அறிவியல் துறைக்கு மட்டுமல்ல, சமூகத்தின் முன்னேற்றத்துக்கும் முக்கிய பங்களிப்பதாக உள்ளது. கண்காட்சிக்கு வந்துள்ள மாணவா்கள், ஆசிரியா்கள் புதுச்சேரியின் பிரான்ஸ் கட்டடக் கலையை கண்டு ரசிக்க வேண்டும்.
கண்காட்சியில் மாணவா்கள் விருதுகளைப் பெறாவிட்டாலும், இதில் பங்கேற்ால் கிடைத்த அனுபவம் எதிா்கால முயற்சிகளுக்கு அடித்தளமாக அமையும். ஒவ்வொருவரும் அறிவியல் உலகுக்கு அா்த்தமுள்ள மற்றும் தாக்கம் நிறைந்த வழிகளில் தொடா்ந்து பங்களிக்க வேண்டும் என்றாா் கே.கைலாஷ்நாதன்.