செய்திகள் :

கால்பந்து வீரரின் மனைவிக்கு அவதூறு செய்திகள் அனுப்பிய சிறுவன் கைது!

post image

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆர்சனல் எனும் கால்பந்து கழக அணியின் வீரர் கய் ஹவர்ட்ஸின் மனைவிக்கு சமூக ஊடகத்தில் அவதூறு மற்றும் மிரட்டல் செய்தி அனுப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டார்.

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் கய் ஹவர்ட்ஸ் இங்கிலாந்தின் பிரபல் கால்பந்து விளையாட்டு கழகமான ’ஆர்சனல்’ அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில், கடந்த ஜன.12 அன்று மான்செஸ்டர் அணியுடனான போட்டியில் ஆர்சனல் அணி தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் வெற்றியடைய கிடைத்த வாய்ப்பை கை ஹாவர்ட்ஸ் நழுவவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், விரக்தியடைந்த அந்த அணியின் ரசிகரான வட லண்டன் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் கை ஹவர்ட்ஸின் மனைவியான சோபியா ஹாவர்ட்ஸ்க்கு சமூக ஊடகத்தில் அவதூறு செய்திகள் அனுப்பியுள்ளார்.

இதையும் படிக்க: புதின் பேச்சுக்கு வராவிட்டால் கூடுதல் பொருளாதாரத் தடை: டிரம்ப்

மேலும், கர்ப்பமாக இருக்கும் சோபியாவின் குழந்தைக்கு சிலர் கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த செய்திகள் குறித்து சோபியா தனது சமூக ஊடகக் கணக்கில் பகிர்ந்ததைத் தொடர்ந்து அந்த செய்திகள் அனுப்பிய சிறுவனை கண்டுபிடித்த அந்நாட்டு காவல் துறையினர் அவனை கைது செய்தனர். தற்போது அவன் பிணையில் விடுவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!

சென்னை, கிண்டியில் உள்ள கிங் நோய்த்தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது பற்ற... மேலும் பார்க்க

தலித் மணமகனின் குதிரை ஊர்வலத்திற்கு 200 போலீஸார் பலத்த பாதுகாப்பு!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மர் மாவட்டத்தில் தலித் இளைஞரின் திருமணத்தின் குதிரை ஊர்வல நிகழ்ச்சி, காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பில் நடைபெற்றது. அஜ்மர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரேகர் எனும் தலித் இளைஞரின் ... மேலும் பார்க்க

கவனம் ஈர்க்கும் அதிதி ஷங்கரின் பைரவம் டீசர்!

நடிகை அதிதி ஷங்கர் தெலுங்கில் அறிமுகமாகும் பைரவம் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.ஷங்கரின் மகளான் அதிதி ஷங்கர் விருமன் படத்தில் அறிமுகமானார். மாவீரன் படத்துக்கு ரசிகர்கள் ... மேலும் பார்க்க

4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலியான விவகாரம்..ஒருவருக்கு ஆயுள் தண்டனை!

உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலியானதில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தே... மேலும் பார்க்க

காப்பி பேஸ்ட் செய்து இபிஎஸ் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின்

இன்னொரு கட்சித் தலைவரின் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.சிவகங்கையில் பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றி... மேலும் பார்க்க

30 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தோடு இணைந்த 80 வயது மூதாட்டி!

மகாராஷ்டிரத்தின் அஹமத் நகர் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன மூதாட்டி தற்போது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.அஹமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் பெண்ணின் மகன் சுமார் 30 ஆண்டுகளுக... மேலும் பார்க்க