நடுத்தர மக்களுக்காக.. 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஆம் ஆத்மி!
4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலியான விவகாரம்..ஒருவருக்கு ஆயுள் தண்டனை!
உத்தரப் பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் 4 வயது சிறுமி மின்சாரம் தாக்கி பலியானதில் குற்றம்சாட்டப்பட்ட நபருக்கு அம்மாவட்ட நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதியன்று பரேலி மாவட்டத்தின் குயிலா பகுதியைச் சேர்ந்த சிறுமி ஹிப்ஸா (வயது 4) அவரது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த ஷம்சர் அலி என்பவரது வீட்டின் வாசலில் இருந்த மின்சார கம்பியை சிறுமி தொட்டதில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமியின் மாமா இர்பான் ராஸா என்பவர் காவல் துறையினரிடன் அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையின் போது ஷம்சர் அலி தனது வீட்டிற்கு சட்டவிரோதமாக மின்சாரம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், மின்சார இணைப்பு முறைப்படி பொருத்தப்படாததினால் அது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விதத்தில் இருந்ததுள்ளது.
இதையும் படிக்க: 30 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தோடு இணைந்த 80 வயது மூதாட்டி!
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சுமார் 7 சாட்சிகளையும், 15 பகுதிகளான ஆதாரங்களையும் கொண்டு நீதிமன்றத்தில் காவல் துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
அந்த வழக்கு தற்போது பரேலி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்ததைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக மின்சாரம் திருடி சிறுமியின் உயிர் பலியாக காரணமாக அமைந்தததற்காக ஷம்சர் அலிக்கு, நீதிபதி ரவிக்குமார் திவாகர் ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதமும் விதித்துள்ளார்.