செய்திகள் :

காரைக்குடி : `தாயாரைப் பற்றிய நினைவு..!’ - முதலமைச்சர் முன் நா தழுதழுத்த ப.சிதம்பரம்

post image

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் தன் தாயார் பெயரில் கட்டப்பட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட நூலக விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நா தழுதழுக்க பேசியது அனைவரையும் நெகிழ வைத்தது.

நூலகம் திறந்த பின்பு பல்கலைக்கழக அரங்கத்தில் நடந்த விழாவில் ப.சிதம்பரம் பேசும்போது, " என் தாயாருக்கு ஆங்கிலமும் தமிழும் நன்கு தெரியும். என்னை சிறு வயதில் ஆங்கிலம் மற்றும் தமிழ் நூல்களை படிக்கத் தூண்டியவர் அவர்தான். அவருக்கு நன்றி கலந்த அஞ்சலி" என்றார். (அப்போது கண்கள் கலங்க, நா தழுதழுக்க அவர் பேச, அரங்கமே அமைதியானது)

விழாவில்

தொடர்ந்து பேசும்போது, 'தமிழ் வாழ வேண்டும், தமிழ் வளர வேண்டும். வாழ்வதற்கும் வளர்வதற்கும் வேறுபாடு உண்டு. தமிழ் வாழ வேண்டுமென்றால் 9 கோடி தமிழர்களும் தமிழில் எழுதவும் பேசவும் வேண்டும்.

ப.சிதம்பரம்

தமிழ் வளர வேண்டுமென்றால் தமிழ் இலக்கியம், இயல், இசை, நாடகத்தை தாண்டி கணிதம், கணினி அறிவியல், சட்டம், மருத்துவம், வேளாண்மை, மேலாண்மை, டிஜிட்டல், ரோபாடிக்ஸ் தமிழ் என பல புதிய வடிவங்களில் மாற வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் ஆட்சி மொழியாக என்றென்றும் இருக்க வேண்டும்.

இது தனி நூலகம் மட்டுமல்ல, புகழ்பெற்ற அழகப்பா பல்கலைக்கழகத்தின் அங்கம். சிவகங்கை பூமி, தமிழ் வளர்த்த பூமி. தமிழ் வளர்த்தவர்களை தாங்கிய பூமி. புலவர்கள் மட்டுமின்றி தமிழ்ப்புரவலர்கள் வாழ்ந்த இந்த மண்ணில் பல்கலைக்கழகத்தின் விதைகளை விதைத்த அழகப்பர் எங்களுக்கு கிடைத்த வரம்.

விழாவில்

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் வளர்தமிழ் நூலகத்தை நிறுவ முடிந்தது என் குடும்பத்தினருக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. இந்த நூலகத்தின் கொள்ளளவு மிக மிக அதிகம். இன்னும் அதிகப்படுத்தலாம்.

எங்களுக்கு யானைப் பசி., முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு அரசே இங்கே இருக்கிறது. இந்த நூலகம் யானைப் பசிக்கு தமிழ் அன்பர்கள் ஒவ்வொரு கைப்பிடி சோறு தர வேண்டும். தமிழ்நாடு அரசு ஒரு பெரிய பிடிச்சோறு தர வேண்டும்" என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசும்போது, "மேகம் அழுவது உண்டு, அதற்கு பெயர் மழை. இரவு கூட அழுவது உண்டு, அதற்குப் பெயர் பனி., சூரியன் அழுது பார்த்ததுண்டா? அதை இன்று ப.சிதம்பரம் கண்கலங்கியபோது பார்த்தேன்." என்று பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

TVK Vijay : `ஆண்டு விழாவுக்கு முன்னதாக... உத்தரவிட்ட விஜய்’ - பரபரக்கும் த.வெ.க முகாம்!

தமிழக வெற்றிக் கழகம்தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், முதலாம் ஆண்டு நிறைவு விழாவுக்கு முன்னதாகவே நிர்வாகிகள் பட்டியலை வெளியிட தீவிரமாகி வருகிறது த.வெ.க தலைமை. அதுதொடர்பாக, கட்ச... மேலும் பார்க்க

`புதுச்சேரி பல்கலை., மாணவிக்காக சவுக்கால் அடித்துக் கொள்வாரா?’ – அண்ணாமலையை சீண்டிய நாராயணசாமி

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வடமாநில மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் மகளிரணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புது... மேலும் பார்க்க

Explained: பிறப்புரிமை குடியுரிமை; `நோ’ சொன்ன ட்ரம்ப் - அமெரிக்காவில் இந்தியர்களுக்கு பாதிப்பு என்ன?

அமெரிக்க அதிபராக பதவியேற்ற கையோடு தனது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் டொனால்டு ட்ரம்ப். அதில் இந்தியாவின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவிப்பு ‘பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடி... மேலும் பார்க்க

``பதவிக்காக தமிழ்நாட்டையே பாஜக-விடம் அடமானம் வைத்தவர் பழனிசாமி!” - செந்தில் பாலாஜி காட்டம்

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிவு ஒன்றை செய்துள்ளார். அந்த பதிவில்,”தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்று காலைப் பிடித்து முதல்வராகி, ப... மேலும் பார்க்க

காரைக்குடி: ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க 3 கி.மீ தூரம் நடந்து சென்ற முதல்வர் ஸ்டாலின்!

சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காரைக்குடி சாலையில் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கட்சியினரை உற்சாகப்படுத்தினார்.மு.க.ஸ்டாலின் ரோடு ஷோகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக ... மேலும் பார்க்க

Seeman : 'உருட்டுக்கட்டையுடன் தொண்டர்கள்; பிரியாணி போடும் சீமான்' - இராவணக்குடில் களேபரங்கள்!

நீலாங்கரையில் உள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டை பெரியாரிய ஆதரவாளர்கள் கூட்டமைப்பு சார்பில் முற்றுகையிட முயன்று கைதாகியிருக்கின்றனர். இந்த முற்றுகையை முன்னிட்டு சீமானின் வீட்ட... மேலும் பார்க்க