செய்திகள் :

`என்னை எப்படி இடிக்கலாம்?'- ம.பி-யில் தன்னை இடித்து தள்ளிய காரை பழிவாங்கிய நாய்.. வைரலாகும் வீடியோ!

post image

மத்திய பிரதேச மாநிலம், சாகர் என்ற இடத்தில் பிரஹலாடு சிங் கோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணத்திற்காக தனது காரில் புறப்பட்டார். கார் கிளம்பி 500 மீட்டர் தூரத்தில் சென்ற போது சாலையோரம் படுத்திருந்த நாய் மீது லேசாக இடித்துக்கொண்டது. கார் இடித்ததில் நாய்க்கு எந்த வித காயமும் ஏற்படவில்லை. ஆனாலும் கார் சம்பவ இடத்தை கடந்ததும் பல மீட்டர் தூரத்திற்கு நாய் காரை விரட்டிச்சென்று குரைத்துக்கொண்டே இருந்தது. அப்பிரச்னை அப்போதே முடிந்து விட்டது என்று பார்த்தால், நாய் நடந்த சம்பவத்தை மனதில் வைத்திருந்து பழிவாங்கிவிட்டது.

கோஷ் திருமணத்திற்கு சென்றுவிட்டு வந்து இரவு காரை வீட்டிற்கு வெளியில் நிறுத்தினார். அந்த காரின் வரவுக்காக பாதிக்கப்பட்ட நாய் அப்பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தது. காரை நிறுத்திவிட்டு அதன் உரிமையாளர் சென்ற பிறகு கோபத்தில் இருந்த நாய் அந்த காரை கடித்து குதற ஆரம்பித்தது. பல முறை காரை கடித்தது. இதனால் கார் முழுக்க பெயிண்ட் பெயர்ந்து கீறல்கள் ஏற்பட்டது. காலையில் காரை பார்த்த அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்தார். யாரோ மர்ம நபர்தான் இது போன்ற செயலில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்று கார் உரிமையாளர் கருதினார்.

யார் அந்த நபர் என்பதை தெரிந்து கொள்வதற்காக அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்ததும் கார் உரிமையாளர் மேலும் அதிர்ச்சியாகிவிட்டார். நாய் ஒன்று அவரது காரை ஓடி ஓடி தாக்கி சேதப்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அந்த நாயைத்தான் பகலில் கார் உரிமையாளர் கார் மூலம் லேசாக இடித்திருந்தார். அதற்கு பழிவாங்க நாய் காரை கடித்து சேதப்படுத்தி இருந்தது. இப்போது நாயை என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார் கார் உரிமையாளர். நாய் காரை கடித்த காட்சி சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.

Saif Ali Khan: நீதிமன்ற உத்தரவால் சிக்கல்; ரூ.15,000 கோடி சொத்தை இழக்கும் சைஃப் அலிகான் குடும்பம்?

பாலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மத்திய பிரதேசத்தில் ராஜகுடும்பத்தை சேர்ந்தவர். போபால் நவாப்பான பட்டோடி குடும்பத்தை சேர்ந்த சைஃப் அலிகானுக்கு போபாலில் பூர்வீக சொத்து இருக்கிறது. அரண்மனை, நிலம், கட்டடங்கள... மேலும் பார்க்க

`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமலாக்கப் பிரிவு மற்றும் சி.பி.ஐ போன்ற விசாரணை அமைப்புகள் உள்ளூர் போலீஸார் எதாவது வழக்குகளை பதிவு செய்திருந்தால் அதன் அடிப்படையில் தாங்களும் விசாரிப்பதுண்டு. கு... மேலும் பார்க்க

Kumbh Mela: கும்பமேளாவில் மாலை விற்ற பெண் யூடியூப் பிரபலமான கதை; யார் இந்த வைரல் பெண் Monalisa?

மகாகும்பமேளா விழா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயக்ராஜ் நகரில் கடந்த 13 ஆம் தேதி தொடங்கி, முழு வேகத்தில் நடந்து வருகிறது. கும்பமேளாவிற்குச் சாதுக்களும், முனிவர்களும், பிரபலங்களும் வந்து குவிந்த வண்ணம் இருக... மேலும் பார்க்க

Most Watched Reel: 554 மில்லியன் பார்வைகளைக் கடந்த இன்ஸ்டா ரீல்ஸ் - உலக சாதனை படைத்த கேரள இளைஞர்!

21 வயதான முஹம்மது ரிஸ்வான் (@riswan_freestyle) கேரளாவைச் சேர்ந்தவர். இவர் ஃப்ரீஸ்டைல் ​​கால்பந்து வீரர் ஆவார். நவம்பர் 2023 அன்று , அவர் ஒரு ரீலை வெளியிட்டபோது, அது மிகவும் வைரலானது. அது தற்போது உலகில... மேலும் பார்க்க

`வாரத்துக்கு 70 & 90 மணிநேர வேலை... பொருளாதார உயர்வா? அடிமைத்தனமா?' - விகடன் கருத்துக்கணிப்பு

உலகெங்கிலும் முதலாளிகளின் பெரும் வணிக லாபத்துக்காக, உற்பத்திக்கான கருவியாகச் சக்கையாகப் பிழியப்பட்டு, கடும் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான தொழிலாளர்களுக்கு, நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் 8 மணிநேர வே... மேலும் பார்க்க