பார்சிலோனாவின் விடாமுயற்சி..! 2-4லிருந்து 5-4 என த்ரில் வெற்றி!
30 ஆண்டுகளுக்கு பின் குடும்பத்தோடு இணைந்த 80 வயது மூதாட்டி!
மகாராஷ்டிரத்தின் அஹமத் நகர் மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன மூதாட்டி தற்போது குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்துள்ளார்.
அஹமத் நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் பெண்ணின் மகன் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் மரத்தின் மீது ஏறியப்போது அங்கிருந்த மின்சாரக் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து பலியானார். இதனால், கடும் மனவுளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனது வீட்டைவிட்டு வெளியே சென்றவர் காணாமல் போனார்.
இந்நிலையில், தற்போது 80 வயது மூதாட்டியான அந்த பெண் தாணே மாவட்டத்தின் மனநல காப்பகத்தின் அதிகாரிகளின் உதவியால் அவரது குடும்பத்தினரோடு மீண்டும் இணைந்துள்ளார்.
இதுகுறித்து, தாணே மனநல காப்பகத்தின் தலைமை மருத்துவர் நேதாஜி முளிக் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன் வீட்டிலிருந்து காணாமல் போன அந்த பெண் நாசிக் மாவட்டத்தை வந்தடைந்ததாகவும், இத்தனை ஆண்டுகளாக அங்குள்ள பஞ்சவதி நகர் பகுதியில் அவர் சுற்றி வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: மதுரா மசூதியில் கள ஆய்வுக்கான தடை தொடரும்! - உச்சநீதிமன்றம்
மேலும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உடல் மற்றும் மனநலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் காவல் துறையினரால் மீட்கப்பட்டு தாணே மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, நியாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்ட அந்த மூதாட்டிக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையின் பலனாக அவரது உடல் மற்றும் மனநிலையில் முன்னேற்றம் அடைந்ததது. அவரிடம் இருந்து கிடைந்த சிறிய தகவலை சேகரித்த தாணே மருத்தவப் பணியாளர்கள் சுமார் 250 கி.மீ தொலைவில் இருக்கும் அஹமது நகர் காவல் துறையினரை தொடர்புக் கொண்டனர்.
அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் அந்த பெண்ணின் குடும்பத்தினரை கண்டுபிடித்து செய்தியை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சுமார் 30 ஆண்டுகள் கழித்து கடந்த ஜன.17 அன்று அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அந்த மருத்துவமனைக்கு வந்து அவரை முதல் முறையாக சந்தித்து அவரை அஹமது நகரில் உள்ள அவர்களது இல்லத்துக்கு அழைத்து சென்றனர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன அந்த பெண் தற்போது மூதாட்டியாக அவரது குடும்பத்துடன் இணைந்துள்ளது காண்போரை நெகிழச் செய்தது.