நடுத்தர மக்களுக்காக.. 7 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்த ஆம் ஆத்மி!
காப்பி பேஸ்ட் செய்து இபிஎஸ் அறிக்கை: முதல்வர் ஸ்டாலின்
இன்னொரு கட்சித் தலைவரின் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கையில் பல்வேறு திட்டப் பணிகளை தொடக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
”வீரமும் புகழும் கொண்டது சிவகங்கை மாவட்டம், சிவகங்கையை வளர்த்ததற்கு திமுக ஆட்சிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
இதையும் படிக்க: புதிய உச்சத்தில் தங்கம் விலை! வரலாறு காணாத உயர்வு!
இன்னொரு கட்சித் தலைவரின் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. இப்படி அறிக்கையை வெளியிடுவதை வைத்து இபிஎஸ் எப்படிப்பட்டவர் என்று தெரிந்துக் கொள்ளலாம்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதை இபிஎஸ்ஸால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நாங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அவரால் நிரூபிக்க முடியுமா?
சட்டப்பேரவைத் தேர்தலில் கொடுத்த 505 வாக்குறுதிகளில் இதுவரை 389-ஐ நிறைவேற்றியுள்ளோம்.
திண்ணையில் அமர்ந்துகொண்டு வாய்க்கு வந்தபடி பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. இருட்டில் அமர்ந்துகொண்டு அமாவாசையை எண்ணிக்கொண்டு இருக்கிறார் இபிஎஸ்” என்று முதல்வர் பேசினார்