சாம்பியன்ஸ் டிராபி: கேப்டன்கள் போட்டோஷுட்டை புறக்கணிக்கும் ரோஹித்?
பெரியார்: ``ஹோல்சேல் டீலரே பேசமால் இருக்கும்போது பெட்டிக்கடைக்காரர்கள்" - சீமான் காட்டம்
தந்தைப் பெரியார் குறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்து தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``பெரியார் பேசியதை எடுத்துப் பேசுகிறோம். அது மொத்தமும் தவறு என்றால் அதைப் பெரியாரிடம்தான் கேட்கவேண்டும்.
அந்தப் புகைப்படத்தை எடிட் செய்துக்கொடுத்ததாக கூறும் அந்த நபர் யார்... 15 வருடமாக அவர் எங்கே படுத்துக்கிடந்தார்...
வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள்... அதனால் நீதிமன்றம் ஆதாரம் கேட்கும். அப்போது நீதிமன்றத்திடம் அதை சமர்பித்துக்கொள்கிறோம். திருமுருகன் காந்தி விவாதத்துக்கு அழைத்தால் நான் ஏன் செல்ல வேண்டும். என் தம்பி தங்கைகள் இருக்கிறார்கள். அவர்களுடன் விவாதியுங்கள். திருமுருகன் காந்தி, 'பெரியாரை அதிகம் விமர்சித்தது தி.மு.க.,தான்' எனப் பேசியிருக்கிறார்.
புகைப்படம் குறித்துக் கேட்கிறார்கள். முதலில் அந்தப் புகைப்படத்தை எடிட் செய்துக்கொடுத்ததாகக் கூறும் அந்த நபர் யார்... 15 வருடமாக அவர் எங்கே படுத்துக்கிடந்தார்... இவர் எதற்காக அதை வெட்டி ஒட்டிக் கொடுக்க வேண்டும்... அதற்கான தேவை என்ன? அவர் என்னை பார்த்திருக்காரா? பேசியிருக்கிறாரா? அவர் வெங்காயம் படம் எடுத்தவர். அதனால் வெங்காயங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார். அவ்வளவுதான். என்னடா எல்லாரும் காமெடிப் பண்ணிட்டு அலையுறீங்க... பெரியார் மீது அடி விழுந்ததும் பிரபாகரன் பொய் என்று வருகிறீர்கள். பெரியாரா - பிரபாகரனா என மோதிப்பார்த்துவிடலாம்.
ஹோல்சேல் டீலரே பேசமால் இருக்கும்போது பெட்டிக்கடைக் காரர்கள் ஏன் பொங்குகிறார்கள்? வீரமணியைப் பேசச் சொல்லுங்கள்... சுப வீரபாண்டியன் - மணியரசன் விவாதித்தது போல இரண்டு மேசை போடுங்கள்... நான் கேட்கும் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்.
ஆரியக் கூட்டம் வள்ளலார், வள்ளுவரை அபகரிக்க நினைக்கிறது. திராவிடம் அவர்களை அழிக்க நினைக்கிறது.
என்னோடு விவாதிப்பதற்குத் தகுதியானவர்கள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. சோ - குருமூர்த்தியுடன் சேர்ந்து சென்று, காலில் விழுந்து சி.ப ஆதித்யனாரிடம் நாம் தமிழர் கட்சியின் பெயரை வாங்கி வந்தேன் எனக் கொளத்தூர் மணி பேசுகிறார். பொய்யைத் தவிர வேறு எதாவது தெரியுமா உங்களுக்கு..
உங்களுடன் சேர்ந்து, உங்களுடன் வளர்ந்தவன் என்பதாலே, உங்கள் மீது வைத்திருக்கும் அன்பாலேயே உங்களை எதுவும் பேசமாட்டேன் என இப்படியெல்லாம் பேசிவருகிறீர்களா? பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் மொழி காட்டுமிராண்டி மொழி எனப் பேசினாரே பெரியார்... என் மொழியைத் தாழ்த்தி இழிவாகப் பேசுவதற்கு who are you? தமிழனை சூத்திரன் என்றுக் கூறுகிறார்கள் என்கிறார். தமிழன் சூத்திரன் என எங்காவது எழுதியிருக்கிறதா? ஆரியக் கூட்டம் வள்ளலார், வள்ளுவரை அபகரிக்க நினைக்கிறது. திராவிடம் அவர்களை அழிக்க நினைக்கிறது. திராவிடனுக்கும் திருக்குறளுக்கும், வள்ளலாருக்கும் என்ன சம்மந்தம்?
நம் தாய்மொழியை இழிவாகப் பேசியதற்கு தமிழனாக உனக்குக் கோபம் வரவில்லை என்றால் என் மொழி உனக்குப் புரியாது. கைதான் ஓங்கியிருக்கிறேன். அடிக்கவே இல்லை... அதற்குள் இவ்வளவு அலறினால் எப்படி? பெரியார் கொள்கையை அப்படியே பின்பற்றுகிறோம் எனக் கூறுபவர்கள், தாலியை மேடையில் அறுத்தெரிந்த நீங்கள்... கனிமொழியோ, அருள் மொழியோ, சுந்தரவள்ளியோ ஏன் கர்ப்பப்பையை அறுத்தெறியவில்லை. குழந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீ குழந்தை பெற்றுக்கொள்ளும் மிஷின் இல்லை எனப் பெரியார் தானே கூறினார்." என ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.