செய்திகள் :

`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனிவாசன் கேள்வி

post image

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருவள்ளுவரையும், வள்ளலாரையும் வேறு யாரோ களவாட முயற்சிக்கிறார்கள் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன்

இந்து ஞான கருத்துக்களைத்தான் திருவள்ளுவரும், வள்ளலாரும் கூறியுள்ளனர். அவர்கள் இருவரும் இந்துக்கள் அல்லாதவர்கள் போன்ற உருவத்தில் மத அடையாளங்களை திமுக தவிர்த்து வருகிறது. 

உயர்கல்வித்துறைக்கு அதிகமான நிதி மத்திய அரசு கொடுக்கிறது. இதற்கு முன்பாக துணைவேந்தர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அது மாறிவிட்டது. கல்வித்துறையை சுதந்திரமாக சிறந்த கல்வியாளர்களை வைத்து நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

கவர்னர் ஆர்.என்.ரவி.

கவர்னர் மீது தனிப்பட்ட தாக்குதலை திமுக அரசு நடத்தி வருகிறது. அவரை தரக்குறைவாக விமர்சித்து, கட்சி அரசியலுக்குள் அவரை இழுத்து வருவதும் திமுக-தான்.

டங்ஸ்டன்  விவகாரத்தில் தமிழக மக்களின் நலனுக்கு எதிராக பாஜக ஒருபோதும் இருக்காது. விமான நிலையத்துக்கு சென்னையில் வேறு எங்கே இடம் இருக்கிறது என்று தவெக தலைவர் விஜய் சொல்ல வேண்டும். விஜய் மக்களிடம் ஏதாவது பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கிறாரா என்று தெரியவில்லை.

தவெக தலைவர் விஜய்

வளர்ச்சிக்காக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு விஜய்யிடம்  என்ன தீர்வு இருக்கிறது என்று அவர் சொல்ல வேண்டும்.” என்றார்.

வருண்குமார் - சீமான் வழக்கு: திருச்சி நீதிமன்றத்த்தில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த திருச்சி சாட்டை துரைமுருகன் கடந்த வருடம் கைது செய்யப்பட்டபோது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது. சாட்டை துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத... மேலும் பார்க்க

பெரியார்: ``ஹோல்சேல் டீலரே பேசமால் இருக்கும்போது பெட்டிக்கடைக்காரர்கள்" - சீமான் காட்டம்

தந்தைப் பெரியார் குறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்து தெரிவித்து வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ``பெரியார் பே... மேலும் பார்க்க

பரந்தூர் : `பண்ணூரை விட பரந்தூரில் குடும்பங்கள் குறைவு..!" - தமிழக அரசு கூறுவதென்ன?

பரந்தூர் விமான நிலைய சர்ச்சைகாஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. அதே நேரம் இங்கு விமான நிலையம் வேண்டாம் என 13 கிராம மக்கள் 900 நாள்களைக் ... மேலும் பார்க்க

``மக்கள் பிரச்னைகளை நடிகர் விஜய் பேசுவது வரவேற்கத்தக்கது..!" - காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், "நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் 7 வாரங்களாக சம்பளம் கிடைக்கவில்லை. ரூ.58 கோடி... மேலும் பார்க்க

"வள்ளுவரையும், வள்ளலாரையும் கபளிகரம் செய்ய ஒரு கூட்டம் திட்டம் தீட்டி வருகிறது" - மு.க.ஸ்டாலின்

"வள்ளுவருக்கு கருணாநிதி கன்னியாகுமரியில் 133 அடி உயரத்தில் பிரமாண்ட சிலை அமைத்தார். அதன் வெள்ளிவிழா ஆண்டில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி..." என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்... மேலும் பார்க்க