செய்திகள் :

`4,500 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும்!'- பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்; சிக்கிய பெண் வி.ஏ.ஓ

post image

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "வீ.கே.புதூர் தாலுகாவிற்குட்பட்ட கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் குமாரவேல். இவர் தனக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்யவேண்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆன்லைனில் விண்ணப்பம் செய்துள்ளார். இந்த மனு, அப்பகுதி வருவாய் கிராமத்திற்குட்பட்ட ராஜகோபாலபேரி கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி‌யின் பரிசீலனைக்கு வந்துள்ளது.

அப்போது பட்டா மாறுதல் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலகத்துக்கு வந்த குமாரவேலுவிடம், பட்டா மாறுதல் செய்துகொடுக்க தனக்கு 10 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக தரவேண்டும் என வி.ஏ.ஓ. பத்மாவதி கேட்டுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த குமாரவேல் தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என பதில் கூறியிருக்கிறார். இதையடுத்து லஞ்சம் தொடர்பாக பேரம் பேசிய வி.ஏ.ஓ. பத்மாவதி, 5000 ரூபாயாவது லஞ்சம் தந்தால்தான் பட்டா பெயர் மாற்றம் செய்யமுடியும் என கூறியுள்ளார். ஆனால் பணம் கொடுக்க விருப்பமில்லாத குமாரவேல் பட்டா பெயர் மாற்றுவதற்கு வி.ஏ.ஓ. லஞ்சம் கேட்டது குறித்து தென்காசி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய அதிகாரிகள், வி.ஏ.ஓ. பத்மாவதியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்சமாக கொடுக்கும்படி அறிவுறுத்தி அனுப்பினர். அதன்படி ராஜகோபாலபேரி கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற

குமாரவேல், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறியபடி ரசாயனம் தடவிய ரூ.4500 நோட்டுகளை வி.ஏ.ஓ. பத்மாவதியிடம் கொடுத்தார். வி.ஏ.ஓ. பத்மாவதி பணத்தை வாங்கிய நேரத்தில், அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடியாக உள்ளே நுழைந்து வி.ஏ.ஓ.பத்மாவதி கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்" என்றனர்.

ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்; 14 மாவோயிஸ்ட்களை என்கவுன்ட்டர் செய்த பாதுகாப்பு படை!

தகவல் கொடுத்தால் ரூ.1 கோடி பரிசுத் தொகை என்று அறிவிக்கப்பட்டிருந்த மாவோயிஸ்ட் அமைப்பின் முக்கிய நபர் உட்பட 14 மாவோயிஸ்டுகளை மத்திய பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்கவுன்டரில் கொலைசெய்திருக்கின்றனர்.முன்... மேலும் பார்க்க

"மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தைக் குடிக்க மாட்டீங்களா?" - தமிழிசை சொல்வதென்ன?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில்வே ஹவுஸில் இந்திய ரயில்வே துறையில் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற குப்பன் என்பவர் எழுதிய பொறியியல் நூல் வெளியீட்டு விழா இன்று (ஜன 21) நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக... மேலும் பார்க்க

Sathyaraj: "தி.மு.க-வில் இணைந்திருக்கும் என் மகள் திவ்யாவுக்கு..." - சத்யராஜ் நெகிழ்ச்சி

நடிகர் சத்யராஜ் மகன் சிபிராஜ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவரின் மகள் திவ்யாவும் சினிமாவில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரசியலில்தான் அவருக்கு ஆர்வம்.பெரியார் கொளையால் ஈர... மேலும் பார்க்க

Trump : `மஸ்க் டு சுந்தர் பிச்சை; திரண்டு வந்த VIP-க்கள் - ட்ரம்ப் பதவியேற்பு விழா | போட்டோ ஹைலைட்ஸ்

Trump | ட்ரம்ப் பதவியேற்பு விழா Trump | ட்ரம்ப் பதவியேற்பு விழா Trump | ட்ரம்ப் பதவியேற்பு விழா Trump | ட்ரம்ப் பதவியேற்பு விழா Trump | ட்ரம்ப் பதவியேற்பு விழா Trump | ட்ரம்ப் பதவியேற்பு விழா Trump | ... மேலும் பார்க்க

ஈரோடு: ``ஆரத்திக்கு தான்; வாக்குக்கு கொடுக்கவில்லை; அனுதாபப்பட்டு கொடுத்திருக்கலாம்” - முத்துசாமி

ஈரோடு கிழக்குத் தொகுயில் போட்டியிடும் திமுக வேட்பாளரான சந்திரகுமாருக்கு ஆதரவாக அமைச்சர் சு.முத்துசாமி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு இடையன்காட்டு வலசு பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் ம... மேலும் பார்க்க

கனிமவளக் கொள்ளை: `தொடர்கதையாகும் கொலைகள்' - நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்ன?

ஜகபர் அலி கொலை...புதுக்கோட்டை மாவட்டம் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க கவுன்சிலரான இவர், சமூக ஆர்வலராக தொடர்ந்து செயலாற்றி வந்தார். திருமயம் தாலுகாவில் தொடர்ந்து ... மேலும் பார்க்க