செய்திகள் :

ஈரோடு கிழக்கு: தேர்தல் அதிகாரி மாற்றம்

post image

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரியாக இருந்த மணீஷ் மாற்றப்பட்டுள்ளார். புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலின் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி உள்பட 58 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

இதில் 3 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 55 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலை இருந்தது. இதில் 7 சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியின் மாற்று வேட்பாளா் என மொத்தம் 8 வேட்பாளா்கள் வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா்.

இதையடுத்து, திமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 47 வேட்பாளா்களாக போட்டியிட உள்ளதாக அப்போதைய தோ்தல் நடத்தும் அலுவலர் என்.மணீஷ் திங்கள்கிழமை மாலை அறிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.

சுயேச்சை வேட்பாளா்கள் போராட்டம்

இப்பணியின்போது, கா்நாடக மாநிலம் பெங்களூரு, கே.ஆா்.புரம் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த இந்திய பொலிட்டிக்கல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் வி.பத்மாவதி மனு ஏற்கப்பட்டதற்கு சுயேச்சை வேட்பாளா்கள் நூா் முகமது, அக்னி ஆழ்வாா், பத்மராஜன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால், சட்டப் பேரவைத் தொகுதிக்கு அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா் மட்டுமே போட்டியிட முடியும் என போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜகோபால் சுன்கராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த அவா், ஆலோசனை மேற்கொண்டாா். தமிழக தலைமை தோ்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் அவா் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், நள்ளிரவு வரை வேட்பாளா் பட்டியலை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பெங்களூருவைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நள்ளிரவு 1.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 46-ஆக குறைந்தது.

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜர்!

சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜரானார்.திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த்தின் கல்லூரியிலும் அவருக்கு சொந்தமான பல இடங... மேலும் பார்க்க

ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் பறிமுதல்! ஒருவர் கைது!

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் ரூ.5 கோடி மதிப்பிலான திமிங்கில எச்சம் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். தாணே மாவட்டத்தின் ரபோடி பகுதியில் திமிங்கில எச்சம் கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் ... மேலும் பார்க்க

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர்: சீமான்

பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:"பெரியார் சொன்னதை... மேலும் பார்க்க

புதிய உச்சத்தில் தங்கம் விலை! வரலாறு காணாத உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 22) புதன்கிழமை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அந்த வகையில், திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம... மேலும் பார்க்க

தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு!

தமிழக ஆளுநர் ஆா்.என். ரவிக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த புதிய மனு உள்ளிட்ட பிற விவகாரங்கள் தொடா்புடைய வழக்கு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படு... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ப... மேலும் பார்க்க