மருந்துகள் தர கட்டுப்பாடு ஆய்வக மேம்பாட்டிற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு!
அமலாக்கத்துறை அலுவலகத்தில் கதிர் ஆனந்த் ஆஜர்!
சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜரானார்.
திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும் மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்த்தின் கல்லூரியிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாள்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
எம்பி கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான கல்லூரியில் ரூ. 13.7 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்ததாகவும் கல்லூரியில் உள்ள லாக்கரை உடைத்து ரொக்க பணம் ரூ. 75 லட்சத்தை பறிமுதல் செய்ததாகவும் முக்கிய ஆவணங்களின் ஆதரவான பென்டிரைவ், ஹார்டு டிஸ்க் ஆகியவற்றையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தது உள்ளதாகவும் தகவல் தெரியவந்தது.
இதையும் படிக்க: பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர்: சீமான்
இதன் தொடர்பான விசாரணைக்கு கதிர் ஆனந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை முன்னதாக சம்மன் அனுப்பியிருந்தது
இந்நிலையில், இதனை ஏற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை எம்.பி. கதிர் ஆனந்த் விசாரணைக்கு ஆஜரானார்.