பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர்: சீமான்
பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
"பெரியார் சொன்னதை எடுத்துச் செல்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது. பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் அங்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.
பெரியாரா, பிரபாகரனா என்று மோதி பார்க்க வேண்டியதுதான், முக்கிய நபர்களே பேசாமல் இருக்கீறார்கள், நீங்கள்(திமுக) ஏன் பேசுகிறீர்கள். வீரமணியை பேச சொல்லுங்கள்.
சோவுக்கும் குருமூர்த்திக்கும் - நாம் தமிழர் கட்சிக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? சோவும் குருமூர்த்தியும் நாம் தமிழர் கட்சிக்கான சான்றிதழை வாங்கி கொடுத்தார்களா? அதற்கு ஏதேனும் சான்று உள்ளதா?
அடிப்படையிலேயே பெரியார் பிழையானவர். ‘தமிழ் சனியனை விட்டொழியுங்கள்’ என்று பெரியார் கூறினார். தமிழ் மொழியை பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.” என்று பேசினார்.