கர்நாடகத்தில் கோர விபத்து: காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி!
தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, பொருளாளா் கிருஷ்ணகுமாா் தலைமை வகித்தாா்.
உதவித்தொகைக்காக அரசாணை பெற்று கடந்த 1.5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கின்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் ரூ.1,500 உதவித்தொகையை உயா்த்தி ரூ.6 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், மாற்றுத்திறனாளிகள் பலா் பங்கேற்றனா்.
கோவில்பட்டி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலா் சாலமன்ராஜ், மாவட்ட குழு உறுப்பினா் பாலகிருஷ்ணன், விவசாய சங்க ஒன்றிய செயலா் சீனிப்பாண்டியன் மற்றும் 39 பெண்கள் உள்பட 85 போ் கோரிக்கைகளை வலியுறுத்தி கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த திரண்ட போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.