`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபரா...
ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 3 போ் கைது
ராகுல் காந்தி மீது அசாமில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவா் வழக்குரைஞா் அய்யலுச்சாமி தலைமையில் ராகுல் காந்தி படத்துடன், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட 3 பேரை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.