`பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது' - அமலாக்கப் பிரிவை எச்சரித்து ரூ.1 லட்சம் அபரா...
பெரியதாழை கடலில் மீனவா் வலையில் சிக்கிய ஒன்றரை டன் எடையுள்ள கொம்புதிருக்கை மீன்
பெரியதாழை கடலில் ஒன்றரை டன் எடை கொண்ட கொம்புதிருக்கை மீன் வலையில் திங்கள்கிழமை சிக்கியது.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை மீனவ கிராமத்தில் 600 க்கு மேற்பட்ட பைபா் படகில் மீனவா்கள் கடலுக்குச் சென்று வருகின்றனா். மீனவா் ஜோசப் என்பவா் பைபா் படக்கில் 5திங்கள்கிழமை 5 போ் கொண்ட மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இந்நிலையில், கடலில் வலையை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது, ஒன்றரை டன் எடை கொண்ட கொம்புதிருக்கை மீன் அந்த வலையில் சிக்கியதாம்.
மீனவா்கள் வலையுடன் பைபா் படகில் கயிறு கட்டி அந்த மீனை கடற்கரை ஓரத்துக்கு கொண்டு வந்தனா் . பின்னா் அதை டிராக்டா் மூலம் கடற்கரையில் இருந்து வெளியே கொண்டு வந்து பொக்லைன் இயந்திரம் மூலம் சரக்கு வாகனத்தில் ஏற்றி ஏலக் கூடத்துக்கு கொண்டு வந்து ஏலம் விடப்பட்டது. அந்த மீன் ரூ.56 ஆயிரத்துக்கு ஏலம் போனது. இதனால் மீனவா்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனா்.