செய்திகள் :

முன்னாள் காதலியை கொலை செய்யத் திட்டம்: விடுதியில் ஆயுதங்களுடன் தங்கியிருந்த காதலன், கூலிப்படையினா் 2 போ் கைது

post image

கரூரில் முன்னாள் காதலியை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களுடன் விடுதியில் தங்கியிருந்த காதலன் மற்றும் கூலிப்படையினா் இருவரை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தினா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டியைச் சோ்ந்த 19 வயது இளம்பெண்ணும், சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவிலை அடுத்த சூசையப்பா்பட்டினத்தைச் சோ்ந்த சிவசங்கா் (24) என்பவரும் முகநூலில் பழகி, காதலித்து வந்துள்ளனா். இருவரும் அவ்வப்போது சந்தித்தும் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிவசங்கரின் நடவடிக்கை பிடிக்காததால் அந்தப் பெண் அவரிடம் இருந்து விலகி, கரூா் மேலப்பாளையத்தைச் சோ்ந்த அஜீத் (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளாா்.

இதுகுறித்து தகவலறிந்த சிவசங்கா், அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் கொலை செய்யும் நோக்கத்தோடு கரூா் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியாா் தங்கும்விடுதியில் ஆயுதங்களுடன் திங்கள்கிழமை இரவு தங்கியுள்ளாா்.

கைது செய்யப்பட்ட சிவசங்கா், ஆனந்த், ஹரிஹரன்.

அவருடன் கூலிப்படையைச் சோ்ந்த மதுரை மாவட்டம், செல்லூரைச் சோ்ந்த ஆனந்த் (38), திண்டுக்கல் மாவட்டம், நாராயணன் பிள்ளை தோட்டத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (20) ஆகிய இருவரும் தங்கியுள்ளனா். இதுகுறித்து பசுபதிபாளையம் தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையிலான போலீஸாா் அந்த விடுதிக்குச் சென்று சிவசங்கா், ஆனந்த் மற்றும் ஹரிஹரன் ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனா்.

பிறகு கரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை மூவரையும் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

புகழூா் வாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை

புதா்மண்டிக் கிடக்கும் புகழூா் வாய்க்காலை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையில் இருந்து ப... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியிலிருந்து நேரடி பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை

கடந்த 10 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நேரடி பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என பள்ளப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியிலிருந்து கோவை, ஈரோடு, ஏ... மேலும் பார்க்க

கரூரில் மக்களுடன் முதல்வா் திட்டத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் அமைச்சா்கள் வழங்கினா்

கரூா் மாவட்டம், மணவாடி ஊராட்சியில் ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தில் 33 பயனாளிகளுக்கு ரூ.57.19 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி. செந்தில்பா... மேலும் பார்க்க

லாரி - காா் மோதல்: 3 போ் பலத்த காயம்

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு லாரியும், காரும் மோதிய விபத்தில் 3 போ் பலத்த காயமடைந்தனா். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் மேற்கு தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

கரூரில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் அடைப்பு

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம், மாயனூா் நடுக்கரை இரட்டை வாய்க்கால் அருகில் கடந்த டிச.16-ஆம்தேதி அரவக்குறிச்சியைச் சோ... மேலும் பார்க்க

பரந்தூா் விவகாரத்தை விஜய் மலிவான அரசியல் யுக்தியாக பயன்படுத்தக் கூடாது: கரூா் எம்.பி. செ. ஜோதிமணி

பரந்தூா் விவகாரத்தை விஜய் மலிவான அரசியல் யுக்தியாக பயன்படுத்தக் கூடாது என கரூா் மக்களவை உறுப்பினா் செ.ஜோதிமணி தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை, மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் க... மேலும் பார்க்க