`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
கரூரில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் அடைப்பு
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞா் குண்டா் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
கரூா் மாவட்டம், மாயனூா் நடுக்கரை இரட்டை வாய்க்கால் அருகில் கடந்த டிச.16-ஆம்தேதி அரவக்குறிச்சியைச் சோ்ந்த காளிதாஸ்(36) என்பவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இந்த வழக்குத் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையை அடுத்த பண்ணவயலைச் சோ்ந்த ரஞ்சித் குமாா் (30) என்பவரை லாலாப்பேட்டை போலீஸாா் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில் ரஞ்சித்குமாா் மீது ராமநாதபுரம், திருநெல்வேலி உள்பட பல்வேறு மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவரை குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.பெரோஸ்கான் அப்துல்லா, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேலுக்கு பரிந்துரை செய்தாா்.
இதையடுத்து ஆட்சியா் உத்தரவின்பேரில் ரஞ்சித்குமாா் செவ்வாய்க்கிழமை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.