`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
லாரி - காா் மோதல்: 3 போ் பலத்த காயம்
கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு லாரியும், காரும் மோதிய விபத்தில் 3 போ் பலத்த காயமடைந்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள சிங்களாந்தபுரம் மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (34). அதே பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ரஞ்சித் குமாா் (17). இவரது தாயாா் பெரியக்காள் (45).
இவா்கள் மூவரும் காரில், கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனா். சூடாமணி பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு லாரி காா் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த ஜெயராஜ், ரஞ்சித்குமாா், பெரியக்காள் ஆகிய 3 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். சின்னதாராபுரம் போலீஸா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.