ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டிருந்த முக்கிய நபர்; 14 மாவோயிஸ்ட்களை என்கவுன்ட்டர் செய்...
புகழூா் வாய்க்காலை தூா்வாரக் கோரிக்கை
புதா்மண்டிக் கிடக்கும் புகழூா் வாய்க்காலை தூா்வார வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், ஜேடா்பாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் தடுப்பணையில் இருந்து பிரியும் புகழூா் வாய்க்கால் நொய்யல், வேட்டமங்கலம், நாணப்பரப்பு, வேலாயுதம்பாளையம், புஞ்சைத்தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், வாங்கல், நெரூா்வடபாகம் வழியாக சென்று காவிரியில் கலக்கிறது.
இந்த வாய்க்கால் மூலம் சுமாா் 35 ஆயிரம் ஏக்கரில் நெல், வாழை, வெற்றிலை, கோரை, மரவள்ளிக்கிழங்கு, தென்னை உள்ளிட்ட சாகுபடிகள் நடைபெற்று வருகின்றன. கரூா் மாவட்டத்தின் முக்கிய வாய்க்கால்களின் ஒன்றாக இருக்கும் இந்த வாய்க்காலில் ஆங்காங்கே முட்புதா்கள் மண்டிக்கிடக்கின்றன.
இதனால் வாய்க்காலில் நீரோட்டம் தடைபடுவதால் விளை நிலங்களுக்கு போதிய தண்ணீா் கிடைக்காமல் விவசாயிகள் அவதியுற்று வருகிறாா்கள். எனவே வாய்க்காலில் உள்ள முள்புதா்கள், ஆகாயத்தாமரைகள் ஆகியவற்றை அகற்றி தூா்வாரிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.