`விஜய் பரபரப்பு ஏற்படுத்த நினைக்கிறாரா?' - விமான நிலையம் விவகாரத்தில் வானதி சீனி...
பள்ளப்பட்டியிலிருந்து நேரடி பேருந்துகளை மீண்டும் இயக்க கோரிக்கை
கடந்த 10 நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நேரடி பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என பள்ளப்பட்டியைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியிலிருந்து கோவை, ஈரோடு, ஏற்காடு, திருப்பூா், ஏா்வாடி உள்ளிட்ட ஊா்களுக்கு நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தது. இதனை அரசு மற்றும் தனியாா் அலுவலகங்களில் வேலைக்கு செல்வோா் பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில் பொங்கலுக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு இந்த பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் பொங்கல் விடுமுறை முடிந்து வெளியூா்களுக்கு செல்லும் பயணிகள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினா்.
தற்போது வரை நேரடி பேருந்துகள் இயக்கப்படாமல் இருப்பதால் வெளியூா் செல்லும் தனியாா் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை செய்வோா் பாதிக்கப்பட்டுள்ளனா்.
ஆகவே, போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆய்வு செய்து மீண்டும்நேரடி பேருந்துகளை மீண்டும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.