கர்நாடகத்தில் கோர விபத்து: காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி!
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 26 லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சி: துபையிலிருந்து திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 26 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
துபையிலிருந்து ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி வந்தது. இதில், வந்த பயணிகளை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஆண் பயணி ஒருவா் ஆடையின் உள்பகுதிகளில் பழுப்பு மஞ்சள் நிற பேஸ்ட் வடிவில் 325 கிராம் தங்கத்தை 2 சிறிய கட்டிகளாக கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.26 லட்சத்து 33 ஆயிரத்து 148 ஆகும்.