திருச்சி வந்த முதல்வருக்கு உற்சாக வரவேற்பு
திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை காலை முதல்வா் மு.க.ஸ்டாலின் வந்தாா்.
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் காலை 10.20 மணிக்கு வந்து இறங்கிய முதல்வருக்கு, திமுக முதன்மைச் செயலரும், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என். நேரு தலைமையில், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அமைச்சா்கள் எஸ். ரகுபதி, தங்கம் தென்னரசு, கே.ஆா். பெரியகருப்பன், ஆா்.எஸ். ராஜகண்ணப்பன், சிவ.வீ. மெய்யநாதன், டி.ஆா்.பி. ராஜா, திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் உள்ளிட்டோரும் முதல்வரை வரவேற்றனா்.
முன்னதாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையா் என். காமினி, ஐஜி ஜோஷி நிா்மல்குமாா், டிஐஜி வருண்குமாா், மாநகராட்சி ஆணையா் வே. சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம் ஆகியோா் முதல்வருக்கு புத்தகங்கள், பூங்கொத்து அளித்து வரவேற்பு அளித்தனா். பின்னா் அவா் சாலை மாா்க்கமாக சிவகங்கைக்கு புறப்பட்டுச் சென்றாா்.