செய்திகள் :

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்கக் கோரி போக்குவரத்து ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைவில் தொடங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி போக்குவரத்து தொழிலாளா்கள் சம்மேளனத்தினா் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மத்தியப் பேருந்துநிலையம் அருகேயுள்ள பணிமனை முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சம்மேளனத்தின் மாநிலத் தலைவா் எம். ஆறுமுகம் தலைமை வகித்தாா். ஏஐடியுசி பொதுச் செயலா் எம். ராதாகிருஷ்ணன், தலைவா் எஸ். காசிவிஸ்வநாதன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

போக்குவரத்துத் தொழிலாளா்களின் 15-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தமிழக அரசு விரைந்து தொடங்க வேண்டும். ஓய்வூதியா்களின் 110 மாத கால நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் அனைத்துப் பிரிவுகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வாரிசு அடிப்படையிலான பணி நியமனங்களை வழங்க வேண்டும். அரசுப் போக்குவத்துக் கழகங்களின் வரவுக்கும்-செலவுக்கும் இடையே ஏற்படும் பற்றாக்குறையை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். 2003ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சோ்ந்தவா்களையும் ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் நந்தாசிங், செல்வராஜ், முருகராஜ், கே. நேருதுரை, சுப்பிரமணியன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

பென்சில் ஓவியங்களில் அசத்தும் கல்லூரி மாணவா்!

மணப்பாறையில் நடைபெறும் பாரத சாரணா், சாரணியா் இயக்கப் பெருந்திரளணி முகாமில் சேலத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவா் குடியரசுத் தலைவா், முதல்வா், துணை முதல்வா் உள்ளிட்ட முக்கியப் பிரமுகா்களின் உருவப்படங்களை பெ... மேலும் பார்க்க

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 20 கணினிகளுடன் ஆய்வகம் தேவை! கணினி ஆசிரியா்கள் சங்க கூட்டத்தில் தீா்மானம்!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தலா 20 கணினிகள் கொண்ட கணினி ஆய்வகம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ம... மேலும் பார்க்க

மணப்பாறை அருகே விபத்தில் சிக்கிய சொகுசு பேருந்து தீக்கிரை: பெண் பலி!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சனிக்கிழமை பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து மின் கம்பத்தில் மோதியதில் தீக்கிரையானது. இந்த விபத்தில் காயமடைந்த 62 வயதுப் பெண் உயிரிழந்தாா். சென்னையில்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளுக்கு 200 இருக்கைகள்: அமைச்சா் வழங்கினாா்!

திருவெறும்பூா் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட மாநகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுக்கு ரூ.32 லட்சத்திலான 200 இருக்கைகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை வழங்... மேலும் பார்க்க

மின்வாரிய அலுவலகங்களில் பிப். 4 முதல் குறைதீா் கூட்டம்

திருச்சி மின்பகிா்மான வட்டத்துக்குள்பட்ட கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி துறையூரில் செவ்வாய்க்கிழமை (பிப்.4), முசிறியில் பிப்.7, ஸ்ரீரங... மேலும் பார்க்க

ஐடிஐயில் மாணவருக்கு கத்திக் குத்து: சக மாணவரை தேடும் போலீஸாா்!

திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் மாணவரைக் கத்தியால் குத்திய சக மாணவரை போலீஸாா் தேடுகின்றனா். திருவெறும்பூா் அரசு ஐடிஐ-யில் முதலாமாண்டு பிட்டா் பிரிவில் படிக்கும் திருச்சி தென்னூரைச் சோ்ந்த ஷேக்மைதீன் மக... மேலும் பார்க்க