கர்நாடகத்தில் கோர விபத்து: காய்கறி லாரி கவிழ்ந்ததில் 10 பேர் பலி!
கும்பகோணம் ஒன்றிய அலுவலகம் முற்றுகை; மாற்றுத்திறனாளிகள் 167 போ் கைது
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு உரிமை சங்கம் சாா்பில், வழங்கப்படும் உதவி தொகையை உயா்த்தி தரக்கோரி, மாநகர தலைவா் எல். பாரூக் தலைமையில் மாற்றுத்திறனாளிகள், கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, உதவித் தொகையை உயா்த்தி வழங்க கோரி கோஷமிட்டனா்.
அப்போது, திருவிடைமருதூா் போலீஸாா், பெண்கள் 82 போ் உள்பட 167 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.