BB Tamil 8: `தினசரி 50 ஆயிரம் முதல் 10 ஆயிரம்' யாருக்கு எவ்வளவு சம்பளம்? - முழு விவரம்
விஜய் டிவியில் கடந்தாண்டு அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கிய பிக்பாஸ் தமிழ் சீசன் 8 கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது.
முதல் நாள் 18 போட்டியாளர்கள் பிறகு வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 6 பேர் என 24 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்ச்சியில் முத்துக்குமரன் டைட்டில் வென்றார்.
இந்த நிகழ்ச்சியைப் பொறுத்தவரை போட்டியாளர்களுக்கு தினமும் சம்பளம் வழங்கப்படும். பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய் வரை ஒவ்வொருவருக்கும் ஒரு சம்பளம் பேசப்பட்டிருக்கிறது.
இந்த சீசனில் யார் யாருக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டது என பார்க்கலாம்.
ரவீந்தர், நடிகர் ரஞ்சித் இருவருக்கும்தான் இந்த சீசனின் அதிக சம்பளம் என்கிறார்கள். இருவருக்கும் நாள் ஒன்றுக்கு ஐம்பதாயிரம் பேசப்பட்டதாம். இவர்களின் ரவீந்தர் இரண்டாவது வாரமே வெளியேறி விட ரஞ்சித் சில வாரங்கள் நிகழ்ச்சியில் தொடர்ந்தார்.
தாங்கள் இருந்த மொத்த நாட்களூக்கு தினமும் ஐம்பதாயிரம் அடிப்படையில் இவர்கள் சம்பளம் வாங்கியிருக்கிறார்களாம்.
தீபக்கிற்கு ரூ.25 ஆயிரம் வரை பேசப்பட்டதாகத் தெரிகிறது.
அர்னவ், அருண், சத்யா, விஷால், ஜாக்குலின், பவித்ரா, சுனிதா, அன்ஷிதா, தர்ஷிகா, தர்ஷா குப்தா, சாச்சனா, ஆனந்தி, சிவகுமார் ஆகியோருக்கு 20 ஆயிரம் பேசப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
சௌந்தர்யா, ராணவ், ரயான் மூவருக்கும் 15 ஆயிரம்.
ஜெஃப்ரி, வர்ஷினி, மஞ்சரி, தியா ஆகியோருக்கு 10 ஆயிரம் ரூபாய் பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.
டைட்டில் வென்ற முத்துக்குமரனுக்கும் தினசரி சம்பளமாக ரூபாய் பதினைந்தாயிரம் பேசப்பட்டதாம். இந்த தொகை 106 நாட்களுக்குக் கண்க்கிட்டு வழங்கப்படும்.
தவிர டைட்டிலுக்கான ஐம்பது லட்சத்தில் பணப்பெட்டி டாஸ்க்கில் எடுக்கப்பட்டு விட்ட ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரத்தைக் கழித்து (இதில் 50000 முத்துக்குமரனுக்கே செல்கிறது) 40 லட்சத்து ஐம்பதாயிரமும் வழங்கப்படவிருக்கிறது.
மொத்தத்தில் முத்துக்குமரனுக்கு 41 லட்சம் பளஸ் 106 நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படவிருக்கிறது.
போட்டியாளர்கள தினசரி அடிப்படையில் வாங்கும் சம்பளத்திற்கு டி.டி.எஸ் பிடித்தம் உண்டு. தவிர வெற்றியாளர் வாங்கும் பரிசுத்தொகைக்கு வரிப்பிடித்தமும் உண்டு.