கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
கடும் சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை! ரூ. 7.2 லட்சம் கோடி இழப்பு!
பங்குச்சந்தை இன்று(ஜன. 21) கடும் சரிவுடன் வர்த்தகமாகி நிறைவு பெற்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
77,261.72 என்ற புள்ளிகளில் தொடங்கியது.
பிற்பகலில் சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்த நிலையில் வர்த்தக நேர முடிவில் 1,235.08 புள்ளிகள் குறைந்து 75,838.36 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 299.45 புள்ளிகள் குறைந்து 23,045.30 புள்ளிகளில் வர்த்தகமானது.
நேற்று பங்குச்சந்தை ஏற்றம் அடைந்த நிலையில் இன்று கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
இன்று மட்டும் சுமார் 7.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போலோ, டாடா கன்ஸ்யூமர், அல்ட்ராடெக் சிமென்ட், பிபிசிஎல், டிசிஎஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் லாபமடைந்தன.
ஐசிஐசிஐ, ட்ரெண்ட், அதானி போர்ட்ஸ், எம்&எம், என்டிபிசி உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்ப்பின் நடவடிக்கைகள் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமோ என்ற அச்சத்தில் இந்திய பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.