கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
முதல் டி20: இங்கிலாந்து பிளேயிங் லெவன் அறிவிப்பு!
இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நாளை (ஜனவரி 22) முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: ஐசிசி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா 2-வது இடத்துக்கு முன்னேற்றம்!
இந்த நிலையில், முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
முதல் டி20 போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்
பென் டக்கெட், பில் சால்ட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி ப்ரூக், லியம் லிவிங்ஸ்டன், ஜேக்கோப் பெத்தல், ஜேமி ஓவர்டான், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத் மற்றும் மார்க் வுட்.
இந்தியாவுக்கு எதிரான இந்த டி20 தொடரிலிருந்து இங்கிலாந்தின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் தனது பணியைத் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.