கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
தமிழிசைக்கு மாமிசத்துக்கும், கழிவுக்கும் வித்தியாசம் தெரியாதது கொடுமை: செல்வப்பெருந்தகை
ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை செளந்தரராஜனுக்கு மாமிசத்துக்கும் கழிவுக்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
கோமியம் பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு கொண்டது என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசியது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அவரை பணிநீக்கம் செய்யக் கோரி அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இதையும் படிக்க : டாஸ்மாக்கைவிட கோமியம் கெடுதலில்லை: தமிழிசை சௌந்தரராஜன்
இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜனிடம் காமகோடி கருத்து குறித்து எழுப்பிய கேள்வி அவர் பதிலளித்து பேசியதாவது:
“ஆராய்ச்சிப் பூர்வமாக கோமியத்தில் நுண்ணுயிர்களைத் தடுக்கும் சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தான் அதை வீட்டின் முன்பு தெளிப்பார்கள். மாட்டின் சிறுநீரான கோமியம் ஆயுர்வேதத்தில் மருந்து என எழுதப்பட்டுள்ளது.
மாட்டு இறைச்சியை சாப்பிடுவார்கள், ஆனால் மருந்தாக உட்கொள்ள விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட மாட்டின் சிறுநீரை பற்றிப் பேசினால் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்” எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், தமிழிசை கருத்துக்கு கண்டனம் தெரிவித்து செல்வப்பெருந்தகை வெளியிட்ட பதிவில்,
“ஆங்கிலத்தில் மருத்துவம் பயின்ற தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை.
ஆயுர்வேதத்தில் இருக்கிறது என்பதால், கண்ணை மூடிக்கொண்டு அனைத்தையும் நம்ப வேண்டுமா? மாட்டின் கழிவு நீரான சிறுநீரை அமிர்தநீர் என்று பாஜகவில் உள்ளவர்களால்தான் சொல்லமுடியும். இவர்கள் இவ்வாறு சொல்லாவிட்டால்தான் அதிசயம்.
இதுபோன்ற அமிர்தநீர் ஆராய்ச்சி கொண்ட கருத்துகளை இவர்கள் வெளிநாடுகள் செல்லும் போது சொல்லமுடியுமா? வடநாடுகளில், மாட்டை வைத்து, கலவரம் செய்து அரசியல் ஆதாயம் தேடியது போல இங்கேயும் மாட்டரசியல் செய்ய வேண்டாம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.