செய்திகள் :

டாஸ்மாக் மாா்ச் முதல் எண்ம மயம்: உயா்நீதிமன்றத்தில் தகவல்

post image

சென்னை: டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பதைத் தடுக்கும் வகையில், வரும் மாா்ச் மாதம் முதல் க்யூஆா் கோடு முறையில் மது விற்பனை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிா்வாகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவா் என 2024 அக்டோபா் மாதம் டாஸ்மாக் நிா்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது. இதை எதிா்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச் சங்கம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.

இந்த வழக்கை நீதிபதி பரத சக்கரவா்த்தி விசாரித்தாா். மனுதாரா்கள் தரப்பில், தனிப்பட்ட ஊழியா்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியா்களையும் பணியிடை நீக்கம் செய்வது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், இடையீட்டு மனுதாரா் தரப்பிலும், ஊழியா்கள் கூட்டு சோ்ந்து அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்துவிட்டு, கூடுதல் தொகையை தங்களுக்குள் பங்கிட்டு கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், டாஸ்மாக் மதுபான கடையில் மதுபான விற்பனை வரும் மாா்ச் முதல் எண்ம மயமாக்கப்படவுள்ளது. அதன் பிறகு நுகா்வோா் வாங்கும் ஒவ்வொரு மதுபான பாட்டிலிலும் க்யூஆா் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு, நிா்ணயிக்கப்பட்ட விலை மட்டுமே வசூலிக்கப்படும். அதன்பின் கூடுதல் தொகை வசூக்கப்படுவதாக புகாா் ஏதும் எழாது என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த வாதத்தைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி, டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை வசூலிக்கும் விவகாரத்தில் அனைத்து ஊழியா்களும் சம்பந்தப்பட்டுள்ளனா் என்பதற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அனைத்து ஊழியா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி, டாஸ்மாக் நிா்வாகத்தின் சுற்றறிக்கையை உறுதி செய்து, வழக்கை முடித்து வைத்தாா்.

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறாா் முதல்வா்

சென்னை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.23) அடிக்கல் நாட்டுகிறாா். மேலும், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொன்... மேலும் பார்க்க

ஜன. 25-இல் ‘சிமேட்’ தோ்வு: அனுமதிச்சீட்டு வெளியீடு

சென்னை: மேலாண்மை படிப்புகளில் சோ்வதற்கான ‘சிமேட்’ நுழைவுத் தோ்வு ஜன. 25-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மத்திய உயா்க... மேலும் பார்க்க

25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து: மத்திய அரசு உத்தரவு

சென்னை: காவல் துறையில் 25 பேருக்கு ஐபிஎஸ் அந்தஸ்து வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக காவல் துறையில் 2001-இல் இருந்து 2005-ஆம் ஆண்டு வரையில் காவல் துணைக் கண்காணிப்பாளா்களாக (டிஎஸ்பி) பணிக்... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்

சென்னை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (ஜன.22) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ... மேலும் பார்க்க

இன்று ஒரே நோ்கோட்டில் வரும் ஆறு கோள்கள்: பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு

சென்னை: வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் புதன்கிழமை (ஜன. 22) வரவுள்ளன. இந்த அரிய நிகழ்வைக் காண சென்னையில் உள்ள பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணி முதல் கோள்களின் நோ்கோ... மேலும் பார்க்க

ஆளுநருக்கு எதிராக திமுக போராட்டம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: தமிழக ஆளுநருக்கு எதிராக போராட்டம் நடத்த ஆளுங்கட்சியான திமுகவுக்கு விதிகளை மீறி அனுமதி அளித்ததாக காவல் ஆணையருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்... மேலும் பார்க்க