அரசமைப்புச் சட்டத்தை வகுத்ததில் பிராமணா்களின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்த...
பாரீஸ் காலநிலை ஒப்பந்தம்: விலகுவதற்கான உத்தரவில் டிரம்ப் மீண்டும் கையெழுத்து
பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் கையெழுத்திட்டார்.
கடந்த முறை அமெரிக்க அதிபராக இருந்த போதும், இந்த உத்தரவில் அவர் கையெழுத்திட்டிருந்தார். அந்த உத்தரவு நடைமுறைக்கு வருவதற்கு ஓராண்டுக்கும் மேல் ஆன நிலையில், 2021ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதும் அந்த உத்தரவை ரத்து செய்திருந்தார்.
தற்போது, அமெரிக்க தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அதிபராகியிருப்பதையடுத்து, பாரீஸ் காலநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதற்கான உத்தரவில் மீண்டும் கையெழுத்திட்டிருக்கிறார்.
உலக வெப்பமயமாதலை 2 டிகிரி செல்சியஸுக்குக் கீழ் அதாவது கிட்டத்தட்ட 1.5 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு இணையாகக் குறைக்க வேண்டும் என பாரீஸ் பருவநிலை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டு பல்வேறு நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 193 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, 2016ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி பாரீஸ் ஒப்பந்தம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இதன்படி, ஒவ்வொரு நாடும், அதன் சொந்த சுற்றுச்சூழல் மாசு மற்றும் உமிழ்வு குறைப்புக்கான இலக்குகளை நிர்ணயித்து அது தொடர்பான மதிப்பாய்வுகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தில் இணைந்திருக்கும் வளர்ச்சியடைந்த நாடுகள், வளர்ந்த நாடுகளுக்கு நிதியுதவி வழங்கி, அவர்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற காலநிலையில் நிதி வழங்க வேண்டும்.