கூலித் தொழிலாளி கொலை சம்பவம்: மற்றவா்களையும் கைது செய்யக் கோரி கிராம மக்கள் காத்...
வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வங்கி ஊழியர்! சிபிஐ வழக்குப்பதிவு
திருப்பூரில் வாடிக்கையாளர்களின் நகைகளைத் திருடிய வங்கி ஊழியர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேவுள்ள கேத்தனூர் எஸ்பிஐ வங்கியில் நகைக் கடன் பிரிவில் பணிபுரிந்து வந்தவர் சேகர். 57வயதான இவர் கடந்த 2017 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் நகைகளை நூதன முறையில் கொள்ளையடித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் அடகு வைக்கும் நகைகளில் இருந்து சிறிய பாகங்களை வெட்டி எடுத்து நகைத் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.
அடகு வைத்த நகைகளின் எடை முந்தைய எடை மதிப்பை விட குறைவாக இருப்பதாக வாடிக்கையாளர்கள் கொடுத்த புகாரின் அடைப்படையில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வாடிக்கையாளர்களின் புகாரின் அடைப்படையில் வங்கி மேலாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பின்னர் இது குறித்து காவல் நிலையத்தில் கடந்த 2022 மார்ச் 12ஆம் தேதி புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ரூ. 8 கோடி மதிப்பிலான வாடிக்கையாளர்களின் நகைகளை சேகர் திருடியுள்ளது உறுதி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சேகர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதன் அறிக்கையை நீதிமன்றத்திலும் சமர்ப்பித்தனர்.