பிறப்புசாா் குடியுரிமை ரத்து: டிரம்ப்புக்கு எதிராக 22 மாகாணங்கள் வழக்கு
Champions Trophy 2025: இந்திய ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறும் - வதந்திகளுக்கு BCCI பதில்
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சியில் பாகிஸ்தானின் பெயர், முத்திரைகள் இடம்பெறாது எனத் தகவல்கள் வெளியான கிளம்பிய பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பாகிஸ்தான் முத்திரை இடம்பெறும் என உறுதிப்படுத்தியிருக்கிறார்.
பிசிசிஐ பாகிஸ்தான் முத்திரையை இந்திய வீரர்களின் ஜெர்சியில் பதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்பட்டதையும் மறுத்துள்ளார்.
இதுகுறித்து இந்தியா டுடே வலைதளத்தில் பேசிய சைகியா, பிசிசிஐ சாம்பியன்ஸ் டிராபியில் ஐசிசி வலியுறுத்தியுள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் கடைபிடிப்பதாகக் கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025 (Champions Trophy 2025) பாகிஸ்தானால் நடத்தப்படுவதனால் சாம்பியன்ஸ் டிராபி லோகோவுக்கு கீழ் பாகிஸ்தானின் பெயர் எழுதப்பட்டிருக்கும்.
முன்னதாக பாகிஸ்தானில் இந்திய அணி சென்று விளையாடுவது குறித்து விவாதம் எழுந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்தியா பங்கேற்கும் போட்டிகள், துபாயில் நடைபபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் அவர்கள் நடத்தும் தொடரிலும் குறைந்தபட்சம் ஒரு போட்டியை பாகிஸ்தான் வெளிநாட்டில் விளையாட வேண்டியதிருக்கும்.
"பிசிசிஐ-யின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. ஐசிசி என்ன விதிமுறைகள் வகுத்தாலும் அதைக் கடைபிடிப்போம். ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம் பெறுவதும் அடங்கும். இதுபோன்ற வழிகாட்டுதல்களை மீறும் எவ்வித நோக்கமும் இல்லை. மீடியாக்களுக்கு அந்த தவறான தகவல் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை. ஆனால் பிசிசிஐக்கு நெறிமுறைகளை மீறவோ புறக்கணிக்கவோ எண்ணமில்லை." எனத் தெரிவித்துள்ளார் தேவஜித் சைகியா.
ஒரு ஐசிசி தொடரை நடத்தும் நாட்டின் பெயர் பிற நாடுகளின் ஜெர்சியில் இடம்பெறுவது வழக்கம். 2021 டி20 போட்டிகள் யு.ஏ.இ-யில் நடைபெற்றாலும் இந்தியா நடத்தியதால் பாகிஸ்தான் வீரர்களின் ஜெர்சியில் இந்தியாவின் பெயர் இடம்பெற்றிருந்தது.
பங்களாதேஷ் (பிப். 20), பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) ஆகிய நாடுகளுடன் துபாயில் விளையாடவிருக்கிறது இந்திய அணி. அரையிறுதி மற்றும் இறுதி சுற்றுகளுக்கு முன்னேறும்பட்சத்தில் அந்த போட்டிகளும் துபாயில் நடைபெறும்.