செய்திகள் :

பெண்களைக் காப்பதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காக்கிறது பாஜக!

post image

நாட்டில் பாதிக்கப்பட்ட பெண்களைக் காப்பதற்கு பதிலாக குற்றவாளிகளைக் காக்கும் செயல்களில் பாஜக ஈடுபடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

நாட்டில் உள்ள பெண்களைக் காப்போம்; பெண்களுக்கு கல்வி அளிப்போம் என்ற ஹரியாணா அரசின் திட்டம் செயல்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

ஹரியாணா மாநிலம் பானிபட்டில் பெண்களைக் காப்போம்; பெண்களுக்கு கல்வி அளிப்போம் என்ற திட்டத்தை 2015 ஜனவரி 22ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். இத்திட்டம் தொடங்கி இன்றுடன் 10 ஆண்டுகளாகின்றன.

இந்நிலையில் இது குறித்து மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

''பெண்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடியிடம் மூன்று கேள்விகளை எழுப்புகிறோம்.

பெண்களைப் பாதுகாப்போம் என்பதற்கு பதிலாக குற்றவாளிகளைப் பாதுகாப்போம் என்பதையே பாஜக பின்பற்றுவது ஏன்? மணிப்பூர் பெண்கள் நீதி பெறுவது எப்போது?

பட்டியலினத்தைச் சேர்ந்த ஹாத்ரஸ் பெண்ணோ, உன்னாவ் பகுதியைச் சேர்ந்த மகளோ, எங்கள் பெண் மல்யுத்த சாம்பியன்களோ... பாஜக குற்றவாளிகளையே பாதுகாப்பது ஏன்?

பெண்களுக்கு எதிராக ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 43 வழக்குகள் பதிவாவது ஏன்?'' எனப் பதிவிட்டுள்ளார்.

கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்த 2 தலித் இளைஞர்கள் பலி!

குஜராத்தில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் குஜராத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள பட்டி தாலுகாவில் ஒப்பந்தப் பணியாளர்களான பட்டியலினப் பிரிவைச் சேர்ந்த சிராக் கனு படடியா (18), ஜெயேஷ் பாரத் படடியா (2... மேலும் பார்க்க

உன்னாவ் பாலியல் வழக்கு: குற்றவாளி ஜாமீனில் விடுவிப்பு!

பாஜகவிலிருந்து நீக்கப்பட்டுள்ள குல்தீப் சிங் செங்கர் உன்னாவ் பாலியல் வழக்கு குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், நிபந்தனையுடன் கூடிய இடைக்கால ஜாமீனில் விடுவ... மேலும் பார்க்க

மகாராஷ்டிர ரயில் விபத்து: உயிரிழந்தவர்களுக்கு ரூ. 5 லட்சம் வழங்கிய மகாராஷ்டிர முதல்வர்

மகாராஷ்டிரத்தில் புஷ்பக் ரயில் விபத்தில் பலியானவர்களுக்கு மகாராஷ்டிர முதல்வர் இரங்கல் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.மகாராஷ்டிரத்தில் ஜல்கான் மாவட்டத்தில் புஷ்பக் ரயில் விபத்தில் பலியானவர்களுக்க... மேலும் பார்க்க

ரயிலில் தீ? கீழே குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதியதில் 11 பேர் பலி!

மகாராஷ்டிரத்தின் ஜல்கான் மாவட்டத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் உயிரிழப்பு 11-ஆக உயர்ந்துள்ளது.லக்னௌ ரயில் நிலையத்திலிருந்து மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த புஷ்பக் எக்ச்பிரஸ் ரயிலானது, இன்று(ஜன. 22) ... மேலும் பார்க்க

மணிப்பூரில் பாஜக ஆதரவு தொடரும்! ஐக்கிய ஜனதா தளம்

மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு தொடரும் என நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. மணிப்பூரில் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த சில மணிநேரங்களில், ஐக்கிய ஜனத... மேலும் பார்க்க

டிரம்ப்பின் கூடுதல் வரி: உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மைக்கு எதிரானது!

அமெரிக்க அதிபராகத் தேர்வாகியுள்ள டொனல்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள கூடுதல் வரி விதிப்பு, உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மைக்கு எதிரானது என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க