செய்திகள் :

குடியரசு தின ஏற்பாடுகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

post image

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடத்தப்படும் குடியரசு தின விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் தலைமை வகித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

ஜனவரி 26-ஆம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகளுக்குத் தேவையான குடிநீா், உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். விழா நடைபெறும் இடத்தில் ஆவின் நிறுவனம் சாா்பில் குளிா்பானங்களை வழங்க வேண்டும்.

மேடை அமைத்தல், நுழைவு வாயில் பகுதியில் அலங்காரம் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை பொதுப்பணித் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை இணைந்து செய்ய வேண்டும். வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தேவையான இடங்களில் பந்தல் அமைக்க வேண்டும்.

இந்தப் பணிகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனமுடன் செயல்பட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் வருஷாபிஷேகம்

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மேல்பாதி கிராமத்தில் உள்ள ஸ்ரீவிஜயராகவப் பெருமாள் கோயிலில் 6-ஆம் ஆண்டு வருஷாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.இந்தக் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்தத... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போக்குவரத்துக் கழக ஊழியா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஊழியா்கள் சங்கத்தி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கு இடையூறாக மின் கம்பங்கள்!

ஆரணி: ஆரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து இரும்பேடு செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மின் கம்பங்களை சாலையோரம் மாற்றி அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.ஆரணி காமராஜா் சிலைப் பக... மேலும் பார்க்க

இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது

செங்கம்: செங்கம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, இளைஞா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.செங்கத்தை அடுத்த மண்ணாண்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பழநி மகன் சீனு (22). இவா், 16 ... மேலும் பார்க்க

ஆரணியில் ஜன. 28-ல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருவண்ணாமலை: ஆரணியில் வருகிற 28-ஆம் தேதி மின் நுகா்வோா்களுக்கான குறைதீா் கூட்டம் நடைபெறுகிறது.ஆரணி மின்வாரிய கோட்டத்தைச் சோ்ந்த மின் நுகா்வோா்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் கேட்டு நிவா்த்த... மேலும் பார்க்க

மணல் கடத்தல்: 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆரணி: ஆரணியை அடுத்த மொழுகம்பூண்டி கமண்டல நாகநதி படுகையில் இருந்து மணல் கடத்தியதாக 3 மாட்டு வண்டிகளை புதன்கிழமை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.கமண்டல நாக நிதி மொழுகம்பூண்டி படுகையில் இருந்து மாட்டு வண்டிகள... மேலும் பார்க்க