செய்திகள் :

10 வருட தலைமறைவு வாழ்க்கை; செல்ஃபியால் சிக்கல் - என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் தலைவர்!

post image

சத்தீஷ்கர் மற்றும் ஒடிசா எல்லையில் இரண்டு நாட்களுக்கு முன்பு 20 நக்சலைட்கள் பாதுகாப்பு படையினருடன் நடந்த சண்டையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். உயிரிழந்தவர்களில் நக்சலைட் அமைப்பில் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயராம் ரெட்டி என்பவரும் அடங்கும். சலபதி என்று அனைவராலும் அறியப்படும் ஜெயராம் ரெட்டி 2008ம் ஆண்டு ஒடிசாவில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் உயிரிழக்க முக்கிய காரணமாக இருந்தவர் ஆவார். இதற்காக ஜெயராம் பற்றிய தகவல் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஒடிசாவின் நயகர் போலீஸ் ஆயுதக்கிடங்கில் நக்சலைட்கள் கொள்ளையடித்ததிலும் ஜெயராம் முக்கிய பங்கு வகித்தார். நயகர் நகரில் தாக்குதல் நடத்தும்போது அந்த நகருக்கு வரக்கூடிய அனைத்து சாலைகளிலும் மரங்களை வெட்டிப்போட்டு போலீஸார் உள்ளே வர விடாமல் பார்த்துக்கொண்டனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு ஜெயராம் தொடர்ந்து போலீஸாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்தார். அதோடு ஜெயராம் தொடர்பாக எந்த புகைப்படமும் யாரிடமும் சிக்காமல் இருந்தது. இதனால் அவரை கண்டுபிடிப்பதிலும் சிக்கல் இருந்து வந்தது. ஆந்திராவில் 2016ம் ஆண்டு பாதுகாப்பு படையினர் நக்சலைட்களுடன் துப்பாக்கிச்சண்டையில் ஈடுபட்டனர். அப்போது நக்சலைட்கள் ஒரு மொபைல் போனை விட்டுச்சென்றனர். அந்த மொபைல் போனை ஆய்வு செய்தபோது அதில் ஜெயராம் தனது மனைவி அருணாவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்ஃபி ஒன்று இருந்தது. அந்த புகைப்படம் கிடைத்த பிறகு தான் ஜெயராம் புகைப்படத்தை வெளியிட்டு அவரைப்பற்றிய தகவல் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று பாதுகாப்பு படையினர் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்தே ஜெயராம் பாதுகாப்பு மிக்க பகுதிக்குள் சென்றார். எந்நேரமும் ஜெயராமிற்கு 10 பேர் பாதுகாப்பு கொடுத்து வந்தனர். சத்தீஷ்கர் மாநிலம், பாஸ்தர் பகுதியில் முகாமிட்டு இருந்த ஜெயராம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிசா எல்லைக்கு சென்றார். ஆந்திரா மாநிலம், சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயராம் கொரில்லா போர் யுக்தியில் மிகவும் திறமைசாலியாவார். ஆனால் ஒடிசா எல்லையில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஜெயராம் உயிரிழந்தார். ஜெயராம் புகைப்படம் கிடைத்த பிறகுதான் அவரை இலக்கு வைத்து பாதுகாப்பு படையினர் தாக்க ஆரம்பித்தனர். ஜெயராம் இழப்பு நக்சலைட்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் மட்டும் 40 நக்சலைட்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கரூர்: முன்னாள் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்; கொல்ல திட்டம் போட்ட இளைஞர்; முறியடித்த போலீஸ்

திருச்சி மாவட்டம், வையம்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவரும், சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில், சூசையப்பர் பட்டினத்தைச் சேர்ந்த சிவசங்கர் (வயது 24) என்பவரும் சமூக வலைத்தளமான முகநூல் மூல... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ஆடையில்லாமல் வீடியோ காலில் வா’ - இன்ஸ்டாகிராம் நட்பால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது, ஸ்டேடஸ் வைப்பது போன்றவற்றில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த முஜீப் அலி என்பவருடன் நட்பு ஏற்பட்டு ... மேலும் பார்க்க

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கழிவறையில் பதுங்கிய எஸ்ஐ - பணியிடை நீக்கம் செய்து காவல்துறை உத்தரவு!

பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கழிவறையில் பதுங்கி இருந்த விவகாரத்தில் எஸ்.ஐ. பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோன் மூலம் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது: 58). இவர், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டி தொல்லை; பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிய பள்ளி அலுவலர்

விருதுநகர் அருகே பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: குடி போதையால் நேர்ந்த விபரீதம்... நண்பனைக் கொன்ற வாலிபர் கைது; என்ன நடந்தது?

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தில்லைநாச்சியம்மன் கோயில் குடியிருப்புப் பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவரின் மகன் குழந்தை வேலு. இவருக்குத் திருமணமாகி மனை... மேலும் பார்க்க