I won't miss any of Soubin and Suraj Venjaramoodu's movies! - Gautam Vasudev Men...
புதுச்சேரி: `ஆடையில்லாமல் வீடியோ காலில் வா’ - இன்ஸ்டாகிராம் நட்பால் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
புதுச்சேரியைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது, ஸ்டேடஸ் வைப்பது போன்றவற்றில் ஆக்டிவாக இருந்திருக்கிறார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த முஜீப் அலி என்பவருடன் நட்பு ஏற்பட்டு பழகி வந்திருக்கிறார். முஜீப் அலி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் வாட்ஸ்-அப்பிலும் தன்னுடைய புகைப்படங்களை அனுப்பி வந்திருக்கிறார் சிறுமி. ஒருகட்டத்தில் சிறுமியை காதலிப்பதாகவும், ஆடையின்றி வீடியோ காலில் வருமாறும் கூறியிருக்கிறார் முஜீப் அலி. ஆனால் சிறுமி அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதில் கோபமடைந்த முஜீப் அலி, சிறுமியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து அவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
தொடர்ந்து, தன்னை தனிமையில் வந்து சந்திக்கவில்லை என்றால், ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியிருக்கிறார் முஜீப் அலி. அதனால் பயந்துபோன அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்திருக்கிறார். அந்தப் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சிறுமியை எப்போதும் போல முஜீப் அலியுடன் பேசும்படி கூறினர். இதற்கிடையில் முஜீப் அலியை கைது செய்ய, இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி மற்றும் தியாகராஜன் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்த பிறகு, சிறுமி மூலம் முஜீப் அலியை வரவழைக்க திட்டம் வகுத்தனர்.
அதையடுத்து போலீஸார் கூறியபடி எப்போதும் போல பேசிய சிறுமி, தன்னை சந்திக்க புதுச்சேரி கடலூர் எல்லையில் இருக்கும் முள்ளோடை பகுதிக்கு வருமாறு முஜீப் அலியிடம் கூறினார். அதை உண்மை என நம்பி தன்னுடைய இருசக்கர வாகனத்தில் திருவாரூரில் இருந்து முள்ளோடைக்கு வந்த முஜீப் அலி, சிறுமியின் செல்போன் எண்ணுக்குப் போன் செய்தார். அப்போது அங்கு ரகசியமாக காத்திருந்த சைபர் கிரைம் போலீஸார், முஜீப் அலியை சுற்றி வளைத்து கைது செய்து, அவரது செல்போனையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்துப் பேசிய சைபர் கிரைம் போலீஸார், ``எஞ்சினியரின் படித்திருக்கும் முஜீப் அலி, சிங்கப்பூரில் வேலை செய்து வந்தார். கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பிவிட்ட அவர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மூலம் பெண்களுக்கு வலை வீசியிருக்கிறார்.
அதற்காக 16 இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஐ.டி-க்களை பயன்படுத்தி வந்திருக்கிறார். தன்னுடைய ஆசைக்கு இணங்காத பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து, அவர்களை மிரட்டி பணிய வைத்திருக்கிறார். சுமார் 20 பெண்களின் நிர்வாண படங்களும், வீடியோக்களும் இவரது செல்போனில் இருக்கின்றன. தன்னுடன் பழகும் பெண்களை வீடியோ காலில் வரவழைத்து, அதை ரெக்கார்டு செய்து வைத்து மிரட்டியிருக்கிறான். இந்த சிறுமியையும் `நிர்வாணமாக வீடியோ காலில் வா’ என்று மிரட்டியிருக்கிறான். அதில்தான் அந்த சிறுமி பயந்து பெற்றோரிடம் தெரிவித்திருக்கிறார். தற்போது அவனை சிறையில் அடைத்திருக்கிறோம். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவனை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கும்போது, இன்னும் பல தகவல்கள் வெளி வரலாம்” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs