செய்திகள் :

பிரக்ஞானந்தா தனி முன்னிலை

post image

விக் ஆன் ஸீ: நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.

முன்னதாக இணை முன்னிலையில் இருந்த பிரக்ஞானந்தா, 4-ஆவது சுற்றில் சக இந்தியரான லியோன் லூக் மெண்டோன்காவை வீழ்த்தினார். இதர இந்தியர்களில், பி.ஹரிகிருஷ்ணா - நெதர்லாந்தின் மேக்ஸ் வார்மெர்டாமை வென்றார். நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ் - செர்பியாவின் அலெக்ஸி சரானாவுடன் டிரா செய்ய, அர்ஜுன் எரிகைசி - ஸ்லோவேனியாவின் விளாதிமீர் ஃபெடோசீவிடம் தோல்வி கண்டார்.

இதனிடையே, அமெரிக்காவின் ஃபாபியானோ கரானா - நெதர்லாந்தின் அனிஷ் கிரி, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசதாரோவ் - சீனாவின் வெய் யி, ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரெஸ்ட் ஆகியோர் மோதிய ஆட்டங்கள் டிராவில் முடிந்தன.

இதையடுத்து மாஸ்டர்ஸ் பிரிவில் 4 சுற்றுகள் முடிவில் பிரக்ஞானந்தா 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறார். ஹரிகிருஷ்ணா 2-ஆம் இடத்திலும் (3), குகேஷ் 5-ஆம் இடத்திலும் (2.5), அர்ஜுன் எரிகைசி, லியோன் மெண்டோன்கா ஆகியோர் தலா 0.5 புள்ளிகளுடன் முறையே 13 மற்றும் 14-ஆவது இடத்திலும் நீடிக்கின்றனர்.

சேலஞ்சர்ஸ்: இப்போட்டியின் சேலஞ்சர்ஸ் பிரிவு 4-ஆவது சுற்றில், இந்தியாவின் திவ்யா தேஷ்முக் - துருக்கியின் எடிஸ் குரெலையும், ஆர்.வைஷாலி - உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் யாகுபோவையும் வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து புள்ளிகள் பட்டியலில், வைஷாலி 2.5 புள்ளிகளுடன் 6-ஆம் இடத்திலும், திவ்யா தேஷ்முக் 1.5 புள்ளிகளுடன் 11-ஆம் இடத்திலும் உள்ளனர்.

சூர்யா படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான்

சூர்யாவின் 45ஆவது படத்தில் வில்லனாக மன்சூர் அலிகான் நடிக்கிறார். நடிகர் சூர்யாவின் 45-வது படத்தை ஆர். ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். நீதிமன்றத்தை மையமாக வைத்து படத்தின் கதை உருவாகப்பட்டுள்ளதாகக் கூறப்பட... மேலும் பார்க்க

சித்தா பட இயக்குநர் அருண் குமாருக்கு திருமணம்!

இயக்குநர் அருண்குமாரின் திருமண நிகழ்வில் விக்ரம், விஜய் சேபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 2014 ஆம் ஆண்டு பண்ணையாரும் பத்மினியும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.யு ... மேலும் பார்க்க

பட்ஜெட்: கேலோ இந்தியா திட்டத்துக்கு ரூ. 350 கோடி

விளையாட்டு வீரா்களை அடிப்படை அளவில் இருந்து ஆராய்ந்து அவா்களை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய அரசின் முதன்மையான திட்டங்களில் ஒன்றான கேலோ இந்தியா திட்டம் மிகப்பெரிய பலனை அளித்துள்ளது. அதை அடி... மேலும் பார்க்க

கடைசி பந்தில் சென்னை சிங்கம் தோல்வி

இந்தியன் ஸ்ட்ரீட் ப்ரீமியா் லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா டைகா்ஸ் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி கண்டது சென்னை சிங்கம் அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், தானே கொண்டதேவ் மைதா... மேலும் பார்க்க

பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி

ஐஎஸ்எல் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் பலம் வாய்ந்த பெங்களூரு எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது பஞ்சாப் எஃப்சி அணி. இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் புது தில்லி, ஜவாஹா்லால் நேரு ... மேலும் பார்க்க